Tuesday, December 15, 2020

“பண்டையப் பாகிஸ்தானில்”

 ஐயகோ!

இன்று, பாகிஸ்தான் நாட்டின் தூதுவராக , வியட்னாமில் இருக்கும் கொமார் அபாஸ் கொக்கர், டிவைட்டரில் , மிக தீர்க்கமானதும், நமக்கு இது வரை தெரியாததுமான (!!!) செய்தி ஒன்றைச் சொல்லியுள்ளார்!
“ தக்ஷசீலா பல்கலைக் கழகம், 2700 ஆண்டுகளுக்கு முன், “பண்டையப் பாகிஸ்தானில்” இருந்ததாகவும்,
அது இப்போதைய பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்துக்கு அருகில் இருந்ததாகவும்,
16 தேசங்களில் இருந்து "பாகிஸ்தானுக்கு" வந்த 10500 மாணவர்கள் அங்கு 64 விதமான உயர் கல்வியைக் கற்றதாகவும்,
பாணினி போன்ற அறிஞர்கள் அங்கு போதித்ததாகவும்,
சாணைகியர் கூட பண்டையப் "பாகிஸ்தானின் புதல்வர்" தான் என்றும்,
சொல்லி இருக்கிறார்!
அறிவுக் கொழுந்து!
நானும் மேலைநாட்டு ஆசிரியர்கள் எழுதி உள்ள ஆராய்ச்சிப் புத்தகங்கள் சிலவற்றைப் படித்துப் பார்த்ததில், பண்டை இந்தியாவில் தான் இப்படி ஒரு பல்கலைக் கழகம் இருந்து வந்ததாகத் தெரிய வருகிறது! ஒரு வேளை மேலை நாட்டு அறிஞர்கள் அனைவரும் சேர்ந்து சதி செய்த்து பாகிஸ்தானின் பண்டைப் பெருமையை சீர் குலைக்கும் வண்ணம், சரித்திரத்தை மாற்றி, இந்தியாவுக்கு சாதகமாக எழுதி இருப்பார்களோ?
கொமார் அபாஸ் கொக்கர் சொல்வது உண்மையாக இருந்தால், எனக்கு வரும் சந்தேகங்கள்:
1. இஸ்லாத்தை நிறுவிய நபிகள் நாயகம் எப்போது பிறந்தார்? எப்போது இஸ்லாம் பாகிஸ்தானுக்குள் வந்தது? நபிகள் நாயகம் பிறப்பதற்கு முன்னாலேயே பாகிஸ்தானும், ஜின்னாவும் வந்து விட்டார்களா? நேரு கூட தன் “இந்தியாவின் சரித்திரத்தில்” இதைப் பற்றி சொல்லவே இல்லையே!
2. புராதனப் பாகிஸ்தானின் தக்ஷசீலாவில் எந்த மொழியில், என்ன கற்பித்தார்கள்? அப்போதே அரபிக்கும், உர்துவும் வந்து விட்டனவா?
3. பாணினி சாணக்கியர் போன்றோர் இஸ்லாத்தைத் தழுவினார்களா? அவர்கள் மாற்றிக் கொண்ட பெயர்களைப் பற்றி எங்குமே ஒன்றும் காணோம்!
4. இன்னும் அநேகக் கேள்விகள் நினைவுக்கு வருகின்றன! உதாரணமாக பாகிஸ்தான் என்னும் தேசமே எப்போது நடைமுறைக்கு வந்தது? அதற்கு முன் அங்கு ஒரு தேசம் இருந்ததா? அதற்கு பெயர் என்ன? உங்களுக்கும் பல சந்தேகங்கள் வரலாம்! அவரிடமே கேளுங்கள்!
கொக்கர் மாதிரி அறிஞர்கள், பல தேசங்களில் இருந்து கொண்டு டிவைட்டரில் இன்னும் பற்பல சரித்திர உண்மைகளை (!!!) எடுத்து இயம்பலாம்: உதாரணமாக:
1. ஆஃப்கானிஸ்தானில் இருந்து யாராவது ஒரு கஃபார் கான், மஹாபாரதத்துக்கே காரணமாக இருந்த சகுனியும், அவர் சகோதரி காந்தாரியும் இருந்தது "பண்டைய ஆஃப்கானிஸ்தானில்" தான் என்று சொல்லலாம்! மேலும் மஹாபாரதக் கதா காலட்சேபத்தை வேளுகுடி கிருஷ்ணன் சுவாமிகள் , காபுலில் வந்து தான் நிகழ்த்த வேண்டும் எனக் கோரலாம்!
2. இலங்கையில் இருந்து இந்திரஜித் என்பவர், இராவணனது புஷ்பக விமானம் தான் பண்டைய லங்காபுரியின் “ரஃபேல்” என்று சொல்லி, அவற்றைத் திருப்பித் தரக் கோரலாம். இதனை சைன யாத்ரீகர் யுவான் சுவாங் கூடத் தன் செல்போனில் பதிவு செய்திருப்பதாக அவர் சொன்னால்,, சைனா “இல்லை” என்று மறுக்கவா போகிறது?
3. சிவன் உறையும் கைலாச மலைக்கு , பண்டைய பங்களாதேஷ் வழியாகத் தான் போக வேண்டி இருந்தது என்றும், 2000 வருஷங்களுக்கு முன் கைலாஷ் போக, செக்போஸ்ட் ஒன்றை ஷேக் முஜுபுர் ரஹ்மானின் அவாமி லீக் வைத்திருந்தது, இப்போது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது என்றும் “ஷேக் ஹசினா” அம்மையார் வேண்டுமானால் சொல்லி விட்டுப் போகட்டுமே!
4. நேபாளத்தில் இருந்து , ஷெர்பா யாராவது, ஹிமாலயாவில் பார்வதி, பர்வத ராஜன் சதிமாதா எல்லோரும் இருந்தது புராதன நேபாளத்தில் தான் என்று சொன்னால் நாம் தடுக்கப் போகிறோமா என்ன? அங்கு புது கிராமங்கள் சிலவற்றை அமைத்து, அந்த இடங்கள் தனக்குத் தான் சொந்தம் என்று அடாவடி செய்து வரும் சைனா வேண்டுமானால், தான் குடிசைகள் போட்டிருக்கும் பண்டைய சைனாவில் தான், "தக்ஷ யக்ஞமும், வதமும் " நடந்தன என்று சொன்னால் கேட்டுக் கொண்டு இருக்கலாமே!
இம்ரான்கான் கொஞ்சமாகவாவது சரித்திரம் அறிந்தவர்களுக்குப் பதவி கொடுத்தால் நன்றாக இருக்கும்! அல்லது பதவி ஏற்ப்தற்கு முன் ஒரு கோச்சிங் வகுப்புக்கு அனுப்பி விட்டு, பிறகு வியட்னாம் போகச் சொல்லி இருக்கலாம்!
நம் ஸ்டாலின் போன்றவர்களே தேவலாம் போல இருக்கிறது!
ஜெய் ஹிந்த்!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...