Monday, December 14, 2020

*வேளாண் சட்டங்கள் என்ன விதமான விளைவுகளை ஏற்படுத்தும்...*

*1. விவசாய பயிருக்கு இன்சூரன்ஸ் கட்டுவது வாங்கும் கம்பெனியை சேர்ந்தது.*

*2. விவசாயி இனி கடன் வாங்க வேண்டாம், பயிர் செய்ய முன்பணம் வாங்கும் கம்பெனி தரும்.*
*3. தேவையான மெஷின்கள் இனி காலப்போக்கில் கம்பனிகள் விவசாயிகளுக்கு தரும். ஆட்கள் வேலைக்கு கிடைப்பது கடினமாக இருப்பதால் மெஷின்கள் தேவை, அவை இனி மெதுவாக வந்து சேரும்.*
*4. Solar பம்ப் செட், சொட்டுநீர் பாசனம், உரம் போன்றவைகள் விவசாயிக்கு காலப்போக்கில் தரப்படும்.*
*5. பயிர் விளையும் இடத்துக்கே வந்து பொருட்கள் எடுத்து செல்லப்படும், ஏற்கனவே ஒப்புக்கொண்ட விலைக்கு. வெண்டைக்காய் 2 ரூபாய் தான், விவசாயி தற்கொலை என்ற நிலை இனி மறையும்.*
*6. மண்டியில் வாங்குபவர் சொல்வதே விலை என்ற நிலை இனி மாறும். மண்டியில் உள்ள அரசியல்வாதிகளின் ஆட்கள் இனி விவசாயியை மிரட்ட முடியாது.*
*7. மண்டியில் மட்டுமே விற்க வேண்டும் என்ற கட்டுப்பாடு நீக்கபட்டு, யாரிடமும் விவசாயி விற்கலாம் என்பதும் விளைவித்த விவசாயி விலை நிர்ணயம் செய்யலாம் என்ற நிலைக்கு இட்டு செல்லும். MSP என்ற குறைந்த பட்ச விலைக்கு கீழே போகவே போகாது.*
*8. இனி நிறைய குளிர்பதன கிடங்குகள் உருவாக்கப்படும், பொருட்கள் வீணாகாது. ஒவ்வொரு காய்கறி கடையிலும் 30% பொருட்கள் வீணாகும். நாடு முழுவதும் எவ்ளோ பொருட்கள், மனித உழைப்பு, டிரான்ஸ்போர்ட் என்று யோசித்து பாருங்கள். அது இனி நிற்கும்.*
*9.forecasting நடக்கும், அதாவது எங்கெங்கு எவ்ளோ, என்னென்ன பொருட்கள் தேவை என்பது சாப்ட்வேர் மூலம் கணிக்கப்படும். அதிகமான உற்பத்தி, குறைவான உற்பத்தியால் தட்டுப்பாடு என்பதெல்லாம் காலப்போக்கில் நிற்கும்.*
*10. தரிசு நிலங்கள் கூட, இனி விவசாய நிலங்களாக மாறும். விவசாயம் லாபகரமானதாக மாறுவதால் இது இனி நடக்கும்.பாசன நீர் வசதி இல்லாத இடங்களில் நீர் வசதி கொண்டுவர இனி கார்பொரேட் கம்பெனிகள் அரசை நிர்பந்திக்கும். விவசாயம் பெருகும், ஏற்றுமதி கூட அதிகரிக்கும். அந்நிய செலாவணி அதிகரிக்கும்.*
*இந்தியா விவசாய நாடு என்பது அப்போது தான் நடக்கும்.*
*சரி இனி போராட்டத்தில் வைத்த கோரிக்கைகளை பாருங்கள்.. உங்களுக்கே புரியும்.*
*1. கம்பெனி விவசாயிடம் வாங்கினாலும் APMC மண்டி வரி செலுத்தவேண்டும் என்ற கோரிக்கை எதற்கு? விவசாயி மண்டியில் உள்ள நபருக்கு கமிசின் தரவேண்டும் என்று ஏன் கேட்பார்? போராடுவது மண்டி அதிபர்களா, விவசாயிகளா?*
*2. CAA சட்டத்தை நீக்க வேண்டும் என்று கேட்பது ஏன்? போராடுவது இந்தியர்கள் தானே? வெளிநாட்டு நபர்களை வெளியேற்றும் சட்டத்தை அகற்ற கோருவது ஏன்?*
*3. இதற்கு முன்பு பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ள நபர்களின் மீதான வழக்குகளை நீக்க கோருவது ஏன்? இது விவசாயிக்கான போராட்டமா?*
*4. போராட்டத்துக்கு தினம் பல கோடிகள் செலவாகிறதே? இதற்கான பண பின்னணி என்ன?*
*~5. இந்திய தேசிய கொடி மீது ஏறி நின்று செருப்பால் அடிப்பது ஏன்? பிரிவினைவாதிகள் போராட்டத்தில் ஊடுருவியுள்ளார்கள் தானே?~*
*6. சில ஆயிரம் பேர் தான் அங்கே உள்ளார்கள், பல லட்சக்கணக்கான விவசாயிகள் சட்டத்தை வரவேற்கிறார்கள். எங்கு வேண்டுமானாலும் விற்றுக்கொள்ளலாம் என்பது விவசாயிக்கு நல்லதே.*
*சில சரத்துகள் சரியில்லை என்றால் அதனை மாற்ற கோரலாம், அரசும் தயாராகவே உள்ளது. மக்கள் இதையெல்லாம் பார்த்தே ராஜஸ்தானில் பாஜகவுக்கு உள்ளாட்சி தேர்தலில் வெற்றியை தந்துள்ளார்கள்..*
*பாஜகவை பிடிக்காதவர்கள், விவசாயத்துக்கு நல்ல சட்டம் வந்துள்ளதை மறைத்து பொய் தகவல்களை தந்து அரசியல் செய்கிறார்கள். விவசாயிகள் இவர்களை புரிந்து கொள்ளவேண்டும்.*
*ஒரு லிட்டர் பால் விவசாயியிடம் கொள்முதல் விலை ₹23*
*விற்பனை விலை ₹46*
*நெல் கொள்முதல் விலை ₹8*
*அரிசி விற்பனை விலை ₹50*
*உளுந்து கொள்முதல் விலை ₹30*
*விற்பனை விலை ₹110*
*கோதுமை கொள்முதல் விலை ₹12*
*விற்பனை விலை ₹35*
*இவை இரண்டுக்குமான இடைவெளி தான் கமிஷன்.*
*கமிஷன் இல்லாத விற்பனையை தற்போதைய வேளான்மசோதா கொண்டுவரப்போகிறது.*
*இதனால் கமிஷன் ஏஜெண்ட்டுகள் விவசாயி போர்வையில் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.*
*இதை எப்போது விவசாயி புரிந்துகொள்ளப்போகிறான் என்று தெரியவில்லை.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...