Friday, January 1, 2021

ரஜினிகாந்த்..................

 அன்பில்லா ரஜினிகாந்த் அவர்களுக்கு,

மனிதன் எப்போது வேண்டுமானலும் இறக்கலாம். உடம்புக்கு முடியாமல் போகலாம். இதையெல்லாம் எண்ணிக்கொண்டு இருந்தால் ஒரு அடி எடுத்து வைக்க முடியாது. இது போன்ற காரணங்களை காட்டி விலகியது சரியில்லை. உதார் விட்டேன். களத்துக்கு வா என்றதும் பயம் வந்து விட்டது என்பதே உண்மை.
கோடி கோடியாக பணம் வாங்கினார் என்பதை நம்ப முடியவில்லை. பயங்கரமாக மிரட்டப்பட்டிருக்கலாம். அதில் உண்மை இருந்தால், அதை வெளியே சொன்னால் ஊரே கொதித்து எழுமே? மிரட்டியவர்களை மக்களே கொன்று போட்டிருப்பார்களே? சிபிஐ, நீதிமன்றம் என்று நாடே தலையிட்டிருக்குமே? ஊடகம் பின்னி பெடல் எடுத்திருப்பார்களே?
மகளுக்கு பிரச்சினை என்றால் உடம்பு சரியில்லை என்றீர்களா? அத்தனை உரசல்களை மறந்து நாயுடு ஹால் வீட்டு பையன் பிரச்சினைபோது ஜெயலலிதா வீட்டுக்கு போகவில்லை?
இராணுவ வீரன் மாலை திரும்புவோம் என்று எண்ணிக்கொண்டா போருக்கு போகிறான்?
கொரோனா களப்பணி ஆற்றியோர் தனக்கு எதுவுமே ஆகாது என்று எண்ணியா களத்தில் இறங்கினார்கள்?
மனித கழிவை அகற்றும் சாக்கடையில் இறங்குபவன் எவ்வளவு பெரிய ரிஸ்க் எடுக்கிறான்?
மக்கள் சேவை செய்யும்போது உசுரு போனால் போகட்டுமே. இல்லாவிட்டால் சாகவே மாட்டோமா? இதெல்லாம் என்ன ஆன்மிக அறிவு? அப்படியே போனால் என்ன எதாவது இளம் வயதா? இந்நேரம் மரண பயம் போயிருக்க வேண்டாமா?
மீண்டும் பிறக்கிறோம், மீண்டும் இறக்கிறோம் என்ற தத்துவத்தை எத்தனை முறை கேட்டிருப்பீர்? எவ்வளவு மேலே சென்றாலும், எவ்வளவு தத்துவங்கள் கேட்டாலும் அவநம்பிக்கை, தோல்வி பயம், மரண பயம், தான் இருக்கும் அந்த comfort zone தாண்டி வெளியே வர விருப்பம் இல்லாமை இதையெல்லாம் எப்படி மாற்ற முடியும்?
எவ்வளவு நம்பிக்கையுடன் அப்பாவி ரசிகர்கள் வேலை செய்தார்கள்? ஒரு நொடியில் அத்தனை பேரையும் தெருவில் விட்டுவிட்டு போய்விட்டீரே? மன்னிப்பு எதற்கு? குடும்பத்தோடு நேரம் செலவழிக்காமல் உங்கள் பின்னால் சுற்றியதர்கா? எவ்வளவு கைக்காசு போயிருக்கும்? வேலைக்கு செல்லாமல், சம்பாத்தியம் போயிருக்கும்? எனக்கு தேவை என் சுகம், என் சந்தோஷம், எல்லாரும் என்னை நல்லவன், மகான், பெரிய மனிதன் என்று துதி பாடிக்கொண்டே இருக்க வேண்டும். இல்லை?
அந்த ரசிகனுக்கு ஒரு வழிகாட்டி விட்டு அந்த அறிக்கையை முடித்திருக்கலாமே? எப்படியோ போ, எங்கேயோ போ. என்னவோ செய் என்பது போல அல்லவா இருக்கிறது?
நீங்கள் கை கொடுக்காவிட்டாலும் நாடு சரியாகும். வேறு யாராவது சரி செய்வார்கள். உங்கள் ரசிகர்கள்?
No more a Super star. Just a super shame...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...