ஒவ்வொரு தமிழ் மாதமும் தேய்பிறையில் வரும் கிருஷ்ண பட்ச சதுர்த்தி விரதத்தை தான் சங்கடஹர சதுர்த்தி விரதம் என்றும், சங்கஷ்ட ஹரண சதுர்த்தி விரதம் என்றும் கூறுகின்றனர்.
விநாயகப்பெருமானை தேய்பிறை சதுர்த்தியில் வழிபாடு செய்வது மிகப்பெரும் நற்பலன்களை தரக்கூடியது. தேய்பிறை என்றாலும் விநாயகரின் அருளால் சந்திரனுடைய தேஜஸ் வளர்ந்தது. அந்த நன்னாளை தான் நாம் சங்கடஹர சதுர்த்தியாக வழிபட்டு வருகின்றோம்.
சங்கடம் என்றால் துன்பம் என்றும், ஹர என்றால் ஒழிப்பது என்றும், சங்கடஹர என்றால் சங்கடங்களில் இருந்து விடுதலை (துன்பங்களிலிருந்து விடுதலை என்பதாகும்).
ஜோதிட சாஸ்திரப்படி விநாயகர் கேதுவின் அம்சம். கேதுவால் ஏற்படும் களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம், புத்திர தோஷம் ஆகியவற்றை நிவர்த்தி செய்யக்கூடியவர் விநாயகர்.
சந்திரனால் ஏற்படக்கூடிய தடைகளையும், தோஷங்களையும் போக்கக்கூடியவர். சந்திர பகவானும் தனது தோஷங்கள் நீங்கவும், தனது தேய்மானம் நீங்கவும் தேய்பிறை சதுர்த்தி தினத்தன்று ஸ்ரீவிநாயகப் பெருமானை நினைத்து கடும் தவம் செய்ய, சந்திரனின் கலைகள் எனும் பிறைகள் வளர அருள்பாலித்தார்.
விநாயகப் பெருமானுக்கு வெள்ளை எருக்கு, அருகம்புல் மாலை சாற்றி சங்கடஹர சதுர்த்தி தினத்தில் ஆலயத்தை எட்டு முறை வலம் வருதல் சிறப்பானது ஆகும்.
விநாயக விரதத்தை அங்காரகன் (செவ்வாய்) அனுஷ்டித்து நவகிரகங்களில் ஒன்றான பதவி பெற்றதால் சங்கடஹர சதுர்த்தி விரதம், அங்காரக சதுர்த்தி விரதம் என்றும் அழைக்கப்படுகிறது.
அனுமன் சீதையைக் கண்டதும், தமயந்தி நளனை அடைந்ததும், அகலிகை கௌதமரை அடைந்ததும், பாண்டவர்கள;, துரியோதனனை வென்றதும் சங்கடஹர சதுர்த்தி விரதத்தின் மகிமையால் தான்.
சங்கடஹர சதுர்த்தியன்று காலையில் குளித்து முடித்து, விநாயகருக்கு பு ஜை செய்து விரதம் இருந்து அவருக்கு பிடித்தவற்றை நைவேத்தியம் செய்து விநாயகர் ஸ்லோகங்களை பாராயணம் செய்ய வேண்டும்.
மாலையில் அருகில் உள்ள விநாயகர் ஆலயங்களுக்கு சென்று அங்கு நடைபெறும் பு ஜையில் கலந்து கொண்டு, அர்ச்சனை செய்து வழிபட்டு வீடு திரும்பி இரவில் உதயமாகும் சந்திரனை தரிசித்து வழிபாடு செய்து விரதத்தை பு ர்த்தி செய்ய வேண்டும்.
சங்கடஹர சதுர்த்தி தின வழிபாட்டினால், சனி பகவானின் பார்வையால் ஏற்படும் தோஷங்களும், சகல நோய்களும் நீங்குகின்றன.
மேலும், சங்கடஹர சதுர்த்தி விரதம் இருப்பதால் நினைத்த காரியம் கைகூடும். வீண் பழி அகலும். பகைவர்களும் நண்பர்களாவார்கள். தீவினை அகலும். மனச்சுமை நீங்கும்.
No comments:
Post a Comment