Tuesday, August 10, 2021

*திரு ஆடிப்பூரம் (11/08)* *ஆண்டாள் திருநக்ஷத்திரம்*

 ஆடி மாதம் சுக்ல சதுர்தசி கூடிய பூர நக்ஷத்திரத்தில், பெரியாழ்வார் கொத்திவைத்த பூமியில், *துளஸி செடியில் திருவவதாரம் செய்திட்டாள் கோதை நாச்சியார்!*

ஆடி மாதமும், பூர நக்ஷத்திரமும் ஆண்டாள் அவதரித்ததால் ஏற்றம் பெற்றன!
பூமிபிராட்டியார் தாமே அவதாரம் செய்வதாக சங்கல்பித்து ஆண்டாள் நாச்சியாராக அவதரித்தாள்!
*தெள்ளுதமிழில் 'வேதம் அனைத்திற்கும் வித்தாக' திருப்பாவையையும் (30)*
*'பக்திபாவத்தைப் பறைசாற்றும்' நாச்சியார் திருமொழி யையும் (143)*
*அருளிச்செய்தாள்!*
அஞ்சு(ம்) குடியின் சந்ததியான ஆண்டாள் "சீறியசிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து...மூரிநிமிர்ந்து முழங்கிப் பறப்பட்டு" என்றெல்லாம் கண்ணனை நினைத்துப்பாடி, அவன் சீறிய சிங்காசனத்தில் எழுந்தருளியபின் "அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி" என்று "திருப்பாவையில்" மங்களாசாசனம் செய்கிறாள்!
மார்கழி முடிந்து தையிலும் ஆண்டாள் ஒரு நோன்பு நோற்கிறாள். அதுவே "நாச்சியார் திருமொழி" எனும் பிரபந்தம்! அதனாலேயே, இது "தையொரு திங்கள்..." என்ற பாசுரத்துடன் தொடங்குகிறது!
*அன்னவயல் புதுவை ஆண்டாள் அரங்கர்க்கு;*
*பன்னு திருப்பாவை பல்பதியம்-இன்னிசையால்*
*பாடிக்கொடுத்தாள் நற்பாமாலை,*
*பூமாலை சூடிக்கொடுத்தாளைச் சொல்லு!*
No photo description available.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...