ரேஷன் பொருட்களை
யாருக்கு வழங்க வேண்டும்
என்பதில் ஒழுங்குமுறை,
உழைத்த மக்களை சோம்பேறிகளாக்கி சும்மா
ஒப்புக்கு இயங்கும் 100 நாள் திட்டத்தை நெறிபடுத்துதல்,
அரசியல் கட்சிகள்
தேர்தல் வெற்றிக்காக
பிரயோஜனமில்லாத தேர்தல் வாக்குறுதிகளை
தன் சொந்த செலவுலயே நிறைவேற்றிகொள்ள சட்டம் இயற்றுதல்,
மக்கள் வரிபணத்தில்
அரசு விழாக்கள் கட்சி கூட்டங்களை நடத்தும் ஆட்சியாளர்களை
பதவிநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்தல்,
அரசு கஜானாக்களின்
வரவு செலவுகளை வெளிப்படை நிர்வாகத்துடன் மாதம்தோறும் ஆடிடிங் செய்து
மக்களுக்கும் தெரியும்படியான வெளிப்படை தன்மையை கையாளுதல்,
முன்னாள், இந்நாள்
அரசு அதிகாரிகள், ஆட்சியாளர்களின் சட்டத்திற்கு புறம்பான சொத்துக்களை
பறிமுதல் செய்தல்
போன்ற ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை
உடனடியாக எடுக்க வேண்டும்.
இதெல்லாம் நடந்தாலே போதும் கடன் சுமையில்லாமல் அக்கம் பக்கம் கையேந்தாமல் வாழ்க்கை வாழலாம்.
No comments:
Post a Comment