Monday, August 2, 2021

அனைத்து தரப்பு மக்களையும் பாதுகாக்கும் பொறுப்பு அரசுக்கு உள்ளது .

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால், வெளி மாநிலங்களில் இருந்து வரும் அனைவருக்கும் பரிசோதனை செய்ய வேண்டிய கட்டாயம்எழுந்துள்ளது. 'அண்டை மாநிலங்களை ஒட்டிய எல்லைகளை தீவிரமாக கண்காணிப்பதுடன், உடனே பரிசோதனை நடவடிக்கைகளை துவக்க வேண்டும்' என, சமூக ஆர்வலர்கள்வலியுறுத்தியுள்ளனர். 'கேரளாவில் இருந்து வரும் பயணியரிடம், உடனே பரிசோதனையை துவக்காமல், 5ம் தேதி வரை காத்திருப்பது ஏன்?' என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

நாடு முழுதும் பல மாநிலங்களில், கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. நம் அண்டை மாநிலமான கேரளாவில், நாள்தோறும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர்.தமிழகத்தை பொறுத்தவரை, தொற்று பாதிப்பு மிகவும் குறைவாக இருந்த நிலையில், நான்கு நாட்களாக அதிகரிக்க துவங்கிஉள்ளது.
கட்டுப்பாடு
குறிப்பாக, சென்னை, கோவை, ஈரோடு, தஞ்சாவூர், சேலம், திருவண்ணாமலை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில், கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது.மாநிலம் முழுதும் சராசரியாக தினமும் 2,000 பேருக்கு தொற்று உறுதியாவதாக அரசு தரப்பு தெரிவிக்கிறது.இதைத் தொடர்ந்து, 'பொதுமக்கள் அதிகம் கூடும் வணிக பகுதிகளை மூட, அந்தந்த மாவட்ட கலெக்டர்கள், மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் முடிவெடுக்கலாம்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னையில், பெரும்பாலான மொத்த வியாபார பகுதிகள், 'சீல்' வைக்கப்பட்டு உள்ளன. கூட்டம் அதிகம் கூடும் இடங்களில் கடைகளை அடைக்க, மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது.கோவையில், இன்று முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன.
காரணம் என்ன?
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்க, அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்டவற்றில் இருந்து எந்த பரிசோதனையும் இன்றி, தொற்று பாதித்தவர்கள் எளிதாக வருவதே காரணம் என்று தெரியவந்துள்ளது. எனவே, கேரளாவில் இருந்து தமிழகம் வருவோருக்கு, 5ம் தேதி முதல் கொரோனா தொற்று அறிவதற்கான, ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனை கட்டாயம் என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் அறிவித்து உள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செயல்படும் கொரோனா பரிசோதனை மையங்களை நேற்று ஆய்வு செய்த அமைச்சர் அளித்த பேட்டி: சென்னை விமான நிலையத்தில், லண்டன், பிரேசில், தென் ஆப்ரிக்கா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வரும் பயணியருக்கு மட்டும், உடல் வெப்ப பரிசோதனையுடன், ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனையும் மேற்கொள்ளப் படுகிறது. இதற்கு, 900 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டு, நான்கு மணி நேரத்தில் முடிவு அறிவிக்கப்படுகிறது.
கொரோனா பரிசோதனை முடிவுகளை, 13 நிமிடங்களில் வெளியிடும் நவீன முறை சில நாட்களில் அறிமுகம் செய்யப்படும். மேலும், கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் அனைவருக்கும், 5ம் தேதி முதல், ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனை கட்டாயமாக்கப்படும். கேரளா - தமிழக எல்லை பகுதிகளில், போலீஸ் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு, 'நெகட்டிவ்' சான்றிதழ் உள்ளவர்கள் மட்டுமே, தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுவர். இது குறித்து, சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி, 14 நாட்கள் முடிந்தவர்கள், அதற்கான சான்றிதழை காட்டி தமிழகத்துக்குள் வரலாம். இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியோருக்கு பரிசோதனை சான்று தேவை இல்லை.இவ்வாறு, சுப்பிரமணியன் கூறினார்.ஆனால், 'கேரளாவில் இருந்து வரும் பயணியருக்கு, 5ம் தேதி முதல் பரிசோதனை என அரசு காத்திருப்பது சரியல்ல; உடனடியாக பரிசோதனையை துவக்க வேண்டும்' என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
மேலும், 'மற்ற இரு அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து வருவோருக்கும், வேறு மாநிலங்களில் இருந்து வருவோருக்கும் பரிசோதனை செய்ய வேண்டும்; மாநிலத்தின் எல்லை பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்' எனவும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
அரசுக்கு பொறுப்பு
கொரோனா பரவலை தடுக்க, தமிழகத்தில் முக்கிய கோவில்களில், நேற்று முதல் நாளை வரை மூன்று நாட்கள், பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், பெரும்பாலான மாவட்டங் களில் உள்ள,முக்கிய கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
அதேநேரம், சர்ச்சுகள், மசூதிகள் எல்லாம், எந்த தடையும் இன்றி செயல்படுகின்றன. நேற்று சர்ச்சு களில் மக்கள் கூடி பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர்.'இது போன்ற செயல்பாடுகளால், அவர்களுக்கும் தொற்று பரவ வாய்ப்புள்ளது.'அனைத்து தரப்பு மக்களையும் பாதுகாக்கும் பொறுப்பு அரசுக்கு உள்ளதை உணர்ந்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...