Monday, August 2, 2021

சக்தி வாய்ந்த புராதன திருக்கோவில் –

எண்கண் முருகன் - அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில்
சிற்பத்தின் கதை: சிற்பியின் கட்டை விரலை வெட்டி விட்டான்.
நாகப்பட்டினம் அருகிலுள்ள சிக்கலில் தெய்வத்தன்மை வாய்ந்த சிற்பி ஒருவன் இருந்தான். அழகிய ஆறுமுகம் கொண்ட வேலவன் சிலையை செய்தான். அப்போது ஆட்சியில் இருந்த பராந்தக சோழ மன்னன், அச்சிலையின் அழகைப்பார்த்து ஆனந்தம் கொண்டான். இது போல இன்னொரு சிலையை செய்து விடக்கூடாது என்பதற்காக, சிற்பியின் கட்டை விரலை வெட்டி விட்டான்.
அவன் மனம் தளராமல் அருகிலுள்ள ஒரு கிராமத்திற்கு சென்றான். தன் இடது கையால் கடுமையான முயற்சி எடுத்து மற்றொரு சிலையை செய்தான். அதை அவ்வூரை ஆண்ட குறுநில மன்னன் முத்தரசன் பார்த்தான். அந்த சிலையிலிருந்து ஒளி வீசியது. சிற்பவேலை நிறைவு பெற்றதும் சிலைக்கு உயிர் வந்து, முருகன் அமர்ந்திருந்த மயில் பறக்க ஆரம்பித்தது. மன்னன் அந்நேரத்தில் வர அதை "எட்டிப்பிடி' என உத்தரவிட்டான். காவலர்கள் மயிலை பிடித்தனர். அதன் கால்களை சிறிதளவு உடைத்தனர். அதன் பின் மயில் சிலையாகி அங்கேயே நின்று கொண்டது. எட்டிப்பிடி என்ற வார்த்தை காலப்போக்கில் "எட்டிக்குடி' என மாறி தற்போது "எட்டுக்குடி' ஆகியுள்ளது.
எட்டுக்குடியில் மற்றொரு அழகிய ஆறுமுகனை வடிவமைக்கக் கண்டு மனம் பொறுக்காத முத்தரச சோழன் சிற்பியின் இரு கண்களையும் பறிக்க,
வலக்கை கட்டை விரலும், இரு கண்களும் இன்றி சிற்பி இங்கு (எண்கண்) இருந்த கருங்கல்லில் ஆறுமுகன் மயில் மேல் அமர்ந்த கோலத்தில் வடிவமைத்து ஆறுமுகனுக்கு கண்திறக்கும் தருணத்தில் அருகில் உதவி செய்த சிறுமியின் கையில் உளி பட்டு ரத்தம் பீரிட்டு சிற்பியின் கண்களில் பட்டு சிற்பியின் கண்கள் பார்வை பெற்றது. முருகனே சிறுமியாக வந்து சிற்பிக்கு அருள் புரிந்தார்.
மூலவரான ஆறுமுகப்பெருமான் சிற்பத்தின் சிறப்பு முழுமூர்த்தத்தின் எடை முழுவதையும் ஊன்றி இருக்கும் மயிலின் ஒன்றைக்கால் தாங்கி இருக்கிறது. இது போன்ற சிற்பத்தை காண்பதரிது. முருகன் தெற்கு நோக்கி உள்ளார்.
சிக்கல், எட்டுக்குடி, எண்கண் ஆகிய மூன்று திருத்தலங்களிலும் மயில் மேல் அமர்ந்த கோலத்தில் ஆறுமுகப்பெருமான் சிலைகள் மூன்றும் ஒரே சிற்பியினால் வடிக்கப்பெற்றது.
கண்நோயுற்றவர்கள் வழிபட்டு கண்நோய் நீங்கி நலனை அடைகின்றனர்.
கல்யாணவரம், குழந்தைவரம், வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி, உடல் நலம் உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக் காகவும் இங்கு பிரார்த்தனை செய்யபடுகிறது.
தன் சிருஷ்டி தொழிலை முருகனிடமிருந்து மீண்டும் பெற பிரம்மா சிவனை நோக்கி எட்டுக் கண்களால் பூஜித்த ஊர் இது. எட்டுக் கண்கள் - எண்கண். தந்தையின் ஆலோசனையை முருகனும் ஒப்புக் கொண்டு பிரம்மாவிற்கு உபதேசம் செய்த ஊர் இது. பிரம்மா எட்டுக் கண்களால் (எண்கண்) பூஜித்தமையால் இத்தலம் பிரம்மபுரம் என்று வழங்கப்பட்டது என தலபுராணம் கூறுகிறது.
சிற்பியின் ஜீவசமாதியும் இங்கு உள்ளது.
இது ஒரு சிவதலம் (பிரம்மபுரீஸ்வரர்) என்றாலும் இங்கு சுப்ரமணியசுவாமி பிரதானம்.
தஞ்சை- திருவாரூர் பேருந்து சாலையில் முகந்தனூர் கிராமத்திற்கு வடக்கே ஒரு கிலோ மீட்டர் தொலைவில் எண்கண் கோயில் உள்ளது. கும்பகோணம் மற்றும் திருவாரூரிலிருந்து இத்தலத்திற்கு பேருந்து வசதி உள்ளது.
No photo description available.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...