''நான்'' என்பது அகந்தை மிகையாகக் கொண்டது. அங்கே அன்பு இருக்காது. உண்மை நிலவாது. "நான், எனது” என்னும் உணர்வுகள் நம்மை ஆட்டிப் படைக்கும் தன்மை கொண்டது...
அது உங்களை மற்றவர்களிடமிருந்து பிரித்து தனிமைப்படுத்தும் எண்ணத்தை தோற்றுவிக்கக் கூடியது...
நான்!, என்று உச்சரிக்கும்போது நீங்கள் அனைவரையும் விட்டு விலகிச் செல்கின்றீர்கள். அது ஆணவத்தின் ஆரம்பம்.. நடக்காது என்ற எண்ணம் ஓர் செருக்கு/ஆணவம், அது மயக்கத்தில் ஆழ்த்தும் எண்ணமாகும். இதைத் தவிர்த்தால் உங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும்...
No comments:
Post a Comment