Thursday, August 5, 2021

ஸ்மிரிதி_இராணி.

 உண்மையான தேசபக்தையின் நியாயமான மனக்குமுறல்.

இந்தப் பெண்மணி முதலில் ஒரு சிம்ம சொப்பனமாக ராகுலுக்கு காட்சி தந்தார்! இப்போது சிங்கமாகவே பார்லிமெண்டில் கர்ஜித்து சோனியா கோஷ்டியினர் எல்லாரையும் துண்டைக் காணேம் துணியக்காணேம் என்று ஓடும்படி அடித்து விரட்டுகிறார்! இவரை பாராளுமன்ற அவையில் முன் வரிசையில் உட்கார வைத்து பாஜக இவரின் திறமையை அங்கீகரித்து இருக்கிறார்கள்.
ஒருவர் பேசுவதை கேட்கும் பொழுதே... தெரிந்து விட்டது உரையின் ஆளுமை! -
''நான் ஸ்மிரிதி இராணி. என்னுடைய சாதியை யாராலும் சொல்ல முடியுமா?'' என்று கம்பீரமாக சபையை பார்த்து கேட்டு, ''நான் என்னுடைய கடமையை செய்தேன். இதற்காக யாரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை''
இதுதான் அவர் உரையின் எழுச்சியே.
ஸ்மிரிதியின் உரையில் சில...
இதே தெலுங்கானாவில், 'தெலுங்கானா மாநிலம்' கேட்டு போராடி எத்தனை மாணவர்கள் தற்கொலை செய்தார்கள்.. 600 மாணவர்கள் காங்கிரஸ் ஆட்சியில் இறந்துள்ளார்கள். பேருக்காவது ஒரு முறை எந்த கல்லூரிக்காவது போய் எட்டி பார்த்து மாணவர்களை ராகுல் சந்த்தித்தது உண்டா...?
ஆனால் ரோஹித் வெமுலாவின் தற்கொலைக்கு இரண்டு தடவை போய் விடிய விடிய துக்கம் விசாரிச்ச ராகுலின் நோக்கம் மலிவான அரசியல்தானே என்ற... ஸ்ம்ரிதியின் கேள்விக்கு காங்கிரஸ் கூடாரம் கப்சிப்.
ரோஹித் வெமுலாவையும் பிற மாணவர்களையும் இடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்த கல்லூரி நிர்வாககுழுவின் அனைத்து உறுப்பினர்களும் காங்கிரஸ் ஆட்சியில் நியமிக்கபட்டவர்கள். நாங்கள் கல்லூரி நிர்வாகத்தில் எந்த தலையீடும் செய்ததில்லை என்ற ஸ்ம்ரிதியின் சீறலுக்கு காங்கிரஸ் மவுனம்..
அந்த பையனின் உயிரை காப்பாற்ற ஏன் எந்த டாக்டரையும் கூப்பிடவில்லை. அந்த பையன் தூக்கில் தொங்கினதாக சொல்லப்படும் அன்று சாயந்திரத்தில் இருந்து மறுநாள் காலை போலீஸ் வரும் வரை இவர்கள் விடுதியில் இருந்து அந்த பையனை தூக்கி கொண்டு எந்த மருத்துவமனைக்கும் ஏன் செல்லவில்லை என்ற ஸ்ம்ரிதியின் கேள்வியில் உள்ள நியாயத்திற்கு
விரைவில் பதில் கிடைக்கும்.
'துர்கா பூஜை அன்று நாடு போற்றும் தெய்வம் துர்காதேவியை பாலியல் தொழிலாளி என்றும் மகிசாசுரனை வாழ்த்தியும் ஜேஎன்யூ மாணவர் கூட்டம் போட்ட கோசங்களை கொல்கத்தா தெருக்களில் வைத்து விவாதிக்க ராகுல் தயாரா?' என்று கேட்ட பொழுது ஸமி்ரிதியின் குரலில் தொனித்த வேதனையை பார்க்கும் பொழுது மனசு வலித்தது.
'யாகூப் மேனனுக்கு தூக்கு தண்டனை விதித்த சுப்ரீம்கோர்ட் ஜட்ஜ் ஒரு இந்து பாசிஸ்ட், அப்சல் குருவின் கருணை மனுவை நிராகரித்து அவனை தூக்கிலிட வைத்த ஜனாதிபதியை விமர்சித்து ஒட்டிய போஸ்டர்களை வைத்துபோட்ட தேசத்துக்கு எதிரான கோஷங்கள் எவ்வளவு..! இதுவா நீங்கள் விரும்பும் பேச்சுரிமை? இதுவா மாணவர்கள் உரிமை?' என்று கோபபட்டு பேசும் பொழுது நெஞ்சு கொதித்தது.
ஒரு கட்டத்தில், 'இந்த தேசத்திற்க்காக வாழ்வேன் இந்த தேசத்திற்காக சாவேன்..கங்கைநீரில் என்னுடைய அஸ்தி கரையும் வரை இந்த தேசதத்திற்காக என்னுடைய துடிப்பு அடங்காது. பாரத் மாதா கீ... ஜே' என்று உணர்ச்சியுடன் சொல்லும்போது அவர் கண்களில் மின்னிய பெருமையை உண்மையாக உணரமுடிந்தது.
May be an image of 1 person and standing

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...