Saturday, August 21, 2021

நம் இனத்தைக் கண்டாலே மறைந்த தலைவருக்கு அறவே பிடிக்காது.

 சில மத்திய தேர்வுகளில் தாழ்த்தப்பட்ட வகுப்பினரை விட பொருளாதாரத்தில் பின் தங்கிய வகுப்பினருக்கு கட் ஆப் மார்க் குறைவாக வந்துள்ளதால் இது ஏதோ மோசடி என்று கூறுகிறார்கள் அதை பற்றிய ஒரு மாற்றுக் கருத்தை இங்கே வைக்கிறேன்.

1. இட ஒதுக்கீடு என்பது எதற்காக கொடுக்கப்படுகிறது என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இட ஒதுக்கீடு என்பது சமூகத்தில் வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு வாய்ப்பு போதிய வசதிகள் கிடைக்கவில்லை என்பதனால் மதிப்பெண்களில் அவர்களுக்கு சில சலுகைகள் காட்டப்படுகிறது.
2. பொருளாதாரத்தில் பின்தங்கிய அவர்களுக்கும் அந்த காரணங்களுக்காகவே இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது.
3. தாழ்த்தப்பட்ட வகுப்பை விட பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கு கட்ஆப் மதிப்பெண் குறைவாக வருகிறது என்றால் என்ன அர்த்தம்?? பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் தாழ்த்தப்பட்டவர்களை விட வசதி வாய்ப்புகளில் பின் தங்கி உள்ளார்கள் என்றும் அர்த்தம் எடுத்துக் கொள்ளலாம் அல்லவா??
4. அல்லது தாழ்த்தப்பட்ட வகுப்பில் பணக்காரர்கள் பலன் அடைந்து மீண்டும் பலனடைந்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும் இது நிரூபிப்பது போல் உள்ளது.
5. எனவே இந்த முடிவுகள் பொருளாதாரத்தில் பின் தங்கிய வகுப்பினருக்கு கொடுக்கப்பட்ட இட ஒதுக்கீட்டை (EWS) நியாயப் படுத்துவதாக உள்ளது.
6. தாழ்த்தப்பட்ட வகுப்பிலும் ஒரே பிரிவினர் பலனடைவதை தடுப்பதற்காக பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ளதைப்போல கிரீமிலேயர் கொண்டு வரப்படுவதன் அவசியத்தையும் இது விளக்குகிறது.
7. எனவே இந்த முடிவுகளை வைத்து பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் மேலும் தங்களுக்கு அதிக இட ஒதுக்கீடு வேண்டும் என்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்கள் தங்கள் வகுப்பிலேயே பணக்காரர்கள் பலனடைந்தவர்கள் மீண்டும் மீண்டும் பலன் அடைவதை தடுப்பதற்காக தங்களுக்கு கிரீமிலேயர் வேண்டுமென்றும் போராட வேண்டிய அற்புதமான தருணம் இது என்றே எண்ணுகிறேன்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...