Saturday, August 21, 2021

அப்பளம் அதிகமாக சாப்பிட்டால் இவ்வளவு ஆபத்துகள் இருக்கா?

 பலருக்கும் பொரித்த அப்பளம் சாப்பிடுவதில் அலாதி பிரியம். அதிலும் தங்களுக்கு பிடித்த உணவில் அப்பளத்தை தொட்டு சாப்பிட பலரும் விரும்புவார்கள்.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல அப்பளமும் அளவுக்கு மிஞ்சினால் தீமையை மட்டுமே நம் உடலுக்கு ஏற்படுத்தும்.
அப்பளத்தை தயாரிக்கவும், ருசி சேர்க்கவும் பயன்படும் பொருள் சோடியம் உப்பு. அந்த அப்பளத்தில் அதிகமாக இருக்கும் முக்கியமான பொருள் சோடியம் உப்பு.
உணவுகளில் மசாலா பொருட்கள் மற்றும் உப்பு சேர்க்கப்படுவது இயல்பே. ஆனால், உடலில் இவை இரண்டுமே அளவுக்கு அதிகமாக சேர்வது நல்லதல்ல. முக்கியமாக உப்பின் அளவு அதிகமாக சேரக் கூடாது.
இன்று ருசி மற்றும் கலப்பு உணவு முறையை பின்பற்றும் போது மசாலா கலப்பு உள்ள “பப்பட்” எனப்படும் அப்பள உணவுகளை நாம் சாப்பிடுகிறோம்.
மசாலா மற்றும் உப்பு ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமாக உடலில் சேர்வதால் அசிடிட்டி மற்றும் செரிமான கோளாறுகள் உண்டாகும்.
இரத்தத்தில் அளவுக்கு அதிகமாக உப்பு சேர்வது, இரத்த அழுத்தம், குமட்டல், தாகம், நீரிழிவு போன்றவை அதிகரிக்க காரணம் ஆகும். செரிமானக் கோளாறுகளும் நரம்புகளை வலுவிழக்க வைக்கும்.
அப்பளம் சாபிட்டால் ஆண்மை கோளாறு நரம்புத் தளர்ச்சி ஆகியவை உண்டாகிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...