Saturday, August 21, 2021

சிலம்புச்செல்வர் " ம.பொ.சி "

 இன்று சென்னை தினம் - 'தலையை கொடுத்தேனும் தலைநகர் சென்னையை காப்பேன்' என்று கர்ஜித்து போராடி தமிழகத்தின் தலைநகரான சென்னையை மீட்டுக் கொடுத்தவர் "தமிழகத்தின் தந்தை' ம.பொ.சி . நம் பாரத தேசத்தின் வரலாற்று நாயகருக்கு அவர் மீட்டெடுத்த சென்னை மாநகரில் ஒரு நினைவு மண்டபம் கூட இல்லை... 'சென்னை தினம்' அரசு விழாவாகக் கூட கொண்டாடப்படவில்லை....ஊடகங்களில் ம.பொ.சியின் சென்னை மீட்பு வரலாற்று போராட்டத்தை பற்றிய ஒரு செய்தி கூட இல்லை.காரணம் தலைநகர் சென்னையை மீட்டுக் கொடுத்தது திராவிடக் கழகங்கள் அல்ல - ம.பொ.சியும், ராஜாஜியும், அன்றைய மேயர் செங்கல்வராயனும், தமிழரசுக் கழக தொண்டர்களும் ஆவர்.

ம.பொ.சி அவர்களின் அவரது வரலாறு திட்டமிட்டு மறைக்கப்பட்டிருக்கின்றது. இந்த தமிழகமே அவரை மீண்டும் தலையில் வைத்துக் கொண்டாடும் காலம் வரும். சென்னை மக்கள் அனைவருமே திருவிழாவாக 'சென்னை தினத்தை' கொண்டாடும் காலமும் வரும்.
தலைநகர் சென்னையை மீட்டெடுத்த "தமிழகத்தின் தந்தை" ம.பொ.சி அவர்களை போற்றி வணங்குவோம்🙏
May be an image of 1 person and text that says 'சென்னை தினம் "தலையை கொடுத்தேனும் தலைநகரை காப்போம்" என்ற முழக்கத்தை முன்வைத்து போராடி, சென்னையை மீட்ட ஐயா ம.பொ.சி அவர்களை நினைவுக்கூுவோம்.'

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...