Friday, August 20, 2021

*அறநிலையத் துறை சட்டமே!! செல்லாது - நேற்று வந்த உயர் நீதிமன்ற வழக்கு!!!*

  *தமிழக அரசிற்கு இது ஒரு சோதனையான காலமே!*

நேற்று உயர் நீதிமன்றத்தில் வந்திருக்கின்ற ஒரு வழக்கு இந்துக் கோவில்களின் அடிப்படை உரிமைகளைப் பற்றியது....
அந்த வழக்கில் இந்து அறநிலையத் துறை சட்டங்கள் செல்லாது என்று அத்துறையின் அடி மடியிலேயே கையை வைத்து விட்டார்கள்!!!....
எனவே, தற்போது..... அறநிலையத்துறை சட்டம் செல்லுமா செல்லாதா என்ற அடிப்படைக் கேள்வியே எழுந்துள்ளது!!
இந்த வழக்கைப் பதிவு செய்தவர்கள் அறநிலையத் துறை மற்றும் கோவில்கள் சம்பந்தமாக பல்வேறு உச்சநீதிமன்ற தீர்ப்பு, ஆணைகள், மற்றும் வழிகாட்டுதல்களை ஆதாரமாகக்கொண்டு வழக்கு தொடுத்துள்ளனர்.
இதற்காக நேற்று நீதிமன்றத்தில் வாதாடியவர்கள் தங்கள் தரப்பு சான்றுகளை எடுத்துக் கூறி இந்து அறநிலையத்துறை சட்டம், அடிப்படையில் செல்லாது என்ற வாதத்தை முன்வைத்து உயர்நீதிமன்றத்தில் இதற்குத் தீர்வு கேட்டுள்ளனர் இதனடிப்படையில் நீதிமன்றமும் இதை ஏற்றுக்கொண்டு தமிழக அரசிற்கு 4 வாரங்களுக்குள் இக்கேள்விக்கான தகுந்த பதிலையும் அதற்குண்டான விளக்கத்தையும் கேட்டுள்ளனர். இது அடிப்படையையே கேள்வி கேட்கும் ஒரு வழக்கு ஆகும்....
உயர்நீதிமன்றம் அரசுக்கு பதிலளிக்க 4 வார அவகாசம் கொடுத்திருப்பதால், அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி இவ்வழக்கு திரும்ப விசாரணைக்குவரும் என்று நீதிமன்றம் ஆணையிட்டு இருக்கிறது. இந்துக்கள் அனைவரும் ஒன்று திரண்டு இதன் அடிப்படையை புரிந்து கொண்டு அறநிலையத்துறையை கேள்விக்குறி ஆகி இருக்கும் இந்த வழக்கினை கூர்ந்து நோக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.🙏🙏🙏
இந்த செய்தி இதுவரை தமிழகத்தில் எந்த TVசேனலிலும் அல்லது ஊடகத்திலும் வெளிவரவில்லை!!! இது வேண்டுமென்றே முக்கியத்துவம் கொடுக்காமல் ஒதுக்கப்பட்டதா என்றும் தெரியவில்லை!!!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...