Friday, November 19, 2021

கடன் தீர்த்து நிம்மதி தரும் குபேர கிரிவலம்.

 கார்த்திகை தீபம் அன்று திருவண்ணாமலை செல்ல முடியவில்லை என வருந்துபவர்கள் இதை பயன்படுத்திக்கொள்ளுங்கள்

வரும் 2.12.2021 அன்று சிவராத்திரியும் பிரதோசமும் சேர்ந்து வரும் நாளில் குரு கிழமையாகிய வியாழன் அன்று குபேரன் திருவண்ணாமலையை சுற்றி வருவதாக ஐதீகம்.
அந்த நாளில் அவருடன் நாமும் சுற்றி வந்தால் பணப்பிரச்சினைகள் தீர்ந்து நிம்மதி ,சந்தோசம் உண்டாகும் செல்வ செழிப்பு உண்டாகும்.அன்று கிரிவலம் வந்து ஓர் இரவு தங்கி மறுநாள் காலை திருவண்ணாமலையாரை தரிசனம் செய்து விட்டு திரும்ப வேண்டும்.
திருவண்ணாமலை என்றாலே கிரிவலம்தான் சிறப்பு..கோயிலில் மட்டும் வழிபட்டுவிட்டு கிரிவலம் எல்லாம் நமக்கு ஒத்து வராது என கிளம்புவோர் பலர்.
ஆனால் சூரியனில் இருந்து விழுந்த துண்டு என்றும் லெமூரியா எனும் கண்டத்தின் மிச்ச துண்டு என்றும் சொல்லப்படும் திருவண்ணாமலை யை சுற்றி வரும்போது அதன் ஆகர்ஷ்ண சக்தியால் நம்மை சுற்றி இருக்கும் கெட்ட சக்திகள் விலகுகின்றன...
மலையை சுற்றி இருக்கும் ஆயிரக்கணக்கான சித்தர் மகான்களின் ஜீவ சமாதிகளின் அருள் அலைகள் நம்மை ஆசிர்வதிக்கும்...நம் மனதில் இருக்கும் வருத்தங்களை போக்கச்செய்யும்...
May be an image of nature

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...