*
*
ஆயிரக்கணக்கினில் அடி வாங்கினாலும் சிலையாகும் வரையில் உளியை உறவாக எண்ணும் கருங்கல்!*
*
கால்களில்லாத போதிலும் பாறைகளில் மோதியும் படுகுழியில் விழுந்து கடலைச் சேரும் குறிக்கோள்களைக் கடத்தி விடாத நதி!*
*
கைகளைத் துண்டித்தாலும் தலையைத் தறித்தாலும் நிழல் பரப்பும் எண்ணத்தில் மீண்டும் தழைக்கின்ற மரம்!*
*
இரும்பு முள்ளில் குத்தினாலும் ரணத்தையும் கூட ரசித்துக் கொண்டே வண்டியிழுக்கும் எருதுகள்!*
*
கனவு நிறைவேறும் வரை கலைத்து விடாதீர் முயற்சியை... ஏனெனில் முயற்சி மட்டுமே முன்னேற்ற மாளிகைக்கு முதலிடமாகும்!வெற்றிப்பாதை!!*
*
உருக்கப்படும் தங்கம் தான் உரு மாறி நகையாகிறது!*
*
அறுக்கப்படும் மரம் தான் அழகான கதவு ஜன்னலாகிறது!*
*
இடிக்கப்படும் நெல் தான் உமி நீங்கி அரிசியாகிறது!*
*
துவைக்கப்படும் துணி தான் தூய்மை பெற்று வெண்மையாகிறது!*
*
ஏற்றப்படும் விளக்கு தான் இருள் நீக்கி ஒளி தருகிறது!*
*
தட்டப்படும் தந்தி தான் தம்புராவில் இசை தருகிறது!*
*
செதுக்கப்படும் பளிங்கு தான் செம்மை பெற்றுச் சிலையாகிறது!*
*
பதப்படுத்தப்படும் தோல் தான் பயனுள்ள காலணியாகிறது!*
*
தோற்றுப் போகும் மனிதன் தான் துணிவு பெற்று வீரனாகிறான்!*
*
தொடர்ந்து முயலும் வீரன் தான் சரித்திரம் படைத்தது வாழ்கிறான்!*
No comments:
Post a Comment