Friday, November 19, 2021

மூலம் நட்சத்திரம்...

 

🔸ஆனி மூலம் அரசாளும்; பின் மூலம் நிர்மூலம்' என்று சொல்வதுதான் சரி.
🔸ஆனி மாதம் மூலம் நட்சத்திரத்தில் பிறப்பவர்களுக்கு சந்திரன் தனுசு ராசியில் இருக்கும். அப்படி தனுசு ராசியில் இருக்கும் சந்திரனை மேஷம், மிதுனம், சிம்மம் ஆகிய ராசிகளில் ஏதேனும் ஒரு ராசியில் இருக்கும் குரு பார்த்தால் அந்த ஜாதகருக்கு நாடாளும் யோகம் ஏற்படும்.
🔸அதேபோல் மூலம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் பிறந்தவர்கள் எதிரிகளை நிர்மூலமாக்குவார்கள் .
🔸ஏற்றுக்கொண்ட தலைமைக்கு எப்போதும் விசுவாசமாக நடந்து கொள்ளும் தன்மை கொண்டவர்கள் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்.
🔸ஸ்ரீ ராமரின் பக்தனான ஹனுமன் அவதரித்த நட்சத்திரமாக கூறப்படுவது மூலம். எதையும், அதன் அடி நாதம் வரை சென்று ஆராயும் தன்மை மூல நட்சத்திரத்திற்கு உண்டு.
🔸யே, யோ, ப, பி போன்ற எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்துக்களாக கொண்டவர்களும், மூல நட்சத்திரத்தின் ஆதிக்கம் கொண்டவர்களே ஆவர்.
🔸கேதுக்கு உரிய மூல நட்சத்திரம் குருவின் வீடான தனுசில் இருப்பதால், இவர்களுக்கு ஆழ்ந்த ஆன்மீக சிந்தனையும், நுணுக்கமான அணுகுமுறையும் நிறைந்து இருக்கும்.
🔸மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கையில் ஏதாவது ஒரு குறிக்கோளுடன் செயல்படுவார்கள்.
🔸இவர்கள் பல பிரச்சனைகளை சந்திக்க நேரும். அது இவர்களுடன் பழகுபவர்களையும் பாதிக்கும்.ஆனாலும், எல்லா தடைகளையும், பிரச்சினைகளையும் எதிர்கொண்டு வெற்றி காண்பார்கள்.
🔸எதிர்காலத்தை பற்றிய இவர்களது கவலையை ஆண்டவனிடம் ஒப்படைப்பது இவர்களின் இயல்பு.
🔸வரவு செலவு விவகாரத்தில் கட்டுப்பாடுகள் இல்லாததால், அவ்வப்போது கஷ்டங்களை சந்திக்க நேரும். இவர்கள் மற்றவர்களுக்கு ஆலோசனை கூறுவதை விரும்புவார்கள். ஆனால், இவர்களே அதை பின்பற்ற மாட்டார்கள்.
🔸தொழிலில் அடிக்கடி மாற்றத்தை சந்திக்க வேண்டி வரும். நண்பர்களுக்காக தன்னுடைய வருமானத்தை அதிகம் செலவு செய்வார்கள்.
🔸ஸ்ரீ ராமரிடம் அனுமன் தன்னை ஒப்படைத்தது போல, இவர்களும் இவர்கள் தங்கள் திறமை, ஆற்றல் அனைத்தையும் தங்கள் தலைமைக்கு சமர்ப்பிப்பார்கள் .
🔸மூல நட்சத்திரத்தில் பிறந்த பலர் தனித்து இயங்கும் தன்மையில் தடுமாற்றம் உள்ளவர்களாக இருப்பார்கள்.
🔸இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள், பொது நிறத்துடன் இருப்பார்கள். கள்ளம் கபடம் இல்லாமல் இருப்பார்கள். பிடிவாத குணம் இருப்பதால், மற்றவர்களை கையாள முடியாத நிலை ஏற்படும். அதனால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரும். பொதுவாக மூல நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு மன வாழ்க்கை திருப்திகரமாக இல்லை என்ற எண்ணம் இருக்கும்.
🔸வாழ்க்கைத்துணையும், குழந்தைகளும் மிகுந்த பாசத்துடன் இருப்பார்கள். பிள்ளைகளின் படிப்பு விஷயத்திலும், அவர்களுக்குச் சிறப்பான எதிர்காலம் அமைத்துத் தரவேண்டும் என்பதிலும் மிகுந்த கவனத்துடன் இருப்பீர்கள். எப்போதும் உழைத்துக் கொண்டே இருக்கவேண்டும் என்று விரும்புவீர்கள்.
🔸ஜாதக அலங்காரம், இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இல்லறம் மற்றும் வைதீகத்தில் செய்யவேண்டிய கடமைகளைத் தவறாமல் செய்பவர்,
🔸தூக்கத்தில் விருப்பமுடையவர், ஒழுக்க சீலர், ஆயுதம், கருவி, உபகரணங்களைப் பயன்படுத்தித் தொழில் செய்பவர், மேன்மையான தவம் புரிபவர், தாய், தந்தையை வணங்குபவர் என்று கூறுகிறது.
🔸மூல நட்சத்திரத்தில் நின்ற கிரகம், திருமணம் ஆகாதவர்கள், திருமணம் ஆகியும் பிரிந்து இருப்பவர்கள், மன வாழ்க்கையில் திருப்தி இல்லாதவர்கள், விபத்தில் சிக்கியவர்கள் போன்றவற்றை குறிக்கும்.
🔸மூல நட்சத்திரமானது அங்குசம், சிங்கத்தின் வால், யானையின் தும்பிக்கை போன்ற வடிவங்களில் இருப்பதால், இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், இவற்றை தங்கள் தொழில் மற்றும் வணிகங்களுக்கு சின்னமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
🔸ராட்சத கணம் கொண்ட மூல நட்சத்திரத்தின் அதிதேவதை ஆஞ்சநேயர் மற்றும் சிவன். பரிகார தெய்வம் விநாயகர். ராமேஸ்வரத்தில் உள்ள ஸ்ரீ பதஞ்சலி சித்தர் ஜீவ சமாதியையும் வணங்கலாம். உகந்த மலர் வெண்சங்கு.
🔸மூல நட்சத்திரத்திற்கு உரிய விருட்சம் மரா மரம். எனவே கோவில் மற்றும் இதர இடங்களில் உள்ள மரா மரத்திற்கு தண்ணீர் ஊற்றுவது சிறப்பு.
🔸இந்த நட்சத்திரத்திற்கான மிருகம் பெண் நாய், பறவை செம்போத்து. எனவே இவற்றுக்கு தொந்தரவு கொடுக்க கூடாது.
🔸தக்கோலம் அருகே உள்ள மப்பேடு சிங்கீஸ்வரர் உடனுறை புஷ்பகுஜாம்பாள் ஆலயமே, இந்த நட்சத்திரத்திற்கு உரிய ஆலயமாகும். ஜென்ம நட்சத்திரத்தில் மூல நட்சத்திரக்காரர்கள் இந்த ஆலயத்தில் வழிபடுவது நல்லது.
🔸மூல நட்சத்திரக்காரர்கள் தங்கள் அதிர்ஷ்டத்தை பெருக்கிக்கொள்ள
விநாயகர் மற்றும் ஆஞ்சநேயர் வழிபாடு சிறப்பு.
🔸கோவில்களில் திருவிழாக்கள், உற்சவங்கள் தொடங்கும் போது கோவிலில் ஏற்றப்படும் கொடியை உங்கள் செலவில் செய்து கோவிலுக்கு காணிக்கையாக கொடுப்பது சிறந்த பரிகாரமாகும்.
🔸எருமை தானம் செய்வது நல்லது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...