தன்னை வளர்த்த சித்திக்கு பள்ளிப்படை எழுப்பிய ராஜேந்திர சோழன் ஏன் தந்தை ராஜ ராஜ சோழனுக்கு பள்ளிப்படை கோவில் எழுப்பவில்லை?
ராஜராஜ சோழன் அவர்களுக்கும், வானதி அவர்களுக்கும் பிறந்தவர்தான் ராஜேந்திர சோழன். ராஜராஜ சோழன் அவர்களின் நான்காவது மனைவிதான் பஞ்சமாதேவி. மிகவும் திறமையானவர் தனக்காக ஒரு குழந்தை பெற்று கொண்டால் வாரிசுப் போட்டி வரும் என்று ராஜ்ய நலனுக்காக வைத்திய முறையின் மூலம் தனக்குக் குழந்தை பிறக்காமல் செய்துகொண்டதோடு ராஜேந்திர சோழனை தனது மகனாக வளர்த்தார்.
அதோடு மட்டுமல்லாமல் அனைத்து ராஜ்ய காரியங்களிலும் ராஜராஜ சோழனுக்கு உதவிகரமாக இருந்தார். தஞ்சை பெரிய கோயில் கட்டுவது சம்பந்தமாக ராஜராஜ சோழனுக்கும், ராஜேந்திர சோழனுக்கும் இடையே நடந்த கருத்து வேறுபாடுகளைக் களைந்ததோடு இருவருக்கும் பாலமாக செயல்பட்டார். எல்லாவற்றிற்கும் மேலாக ராஜராஜ சோழன் அவர்களை கொல்லவந்த விஷ அம்புகளைத் தன்மீது தாங்கிக் கொண்டார். அதில் அவர் உயிர் பிழைத்தாலும் அதனால் வந்த பக்க விளைவின் காரணமாக இறுதிவரை படுத்த படுக்கையாகி பொலிவிழந்து, பற்களனைத்தும் கொட்டிய தருவாயில் ராஜேந்திர சோழனை அழைத்து தனது இறுதி ஆசையாக உனது கையினால்தான் தனக்கு இறுதி மரியாதை செலுத்த வேண்டுமென்று வேண்டிக்கொண்டார்.
இப்படிப்பட்டவரின் தியாகத்தை போற்றும் வகையில்தான் அவருக்குக் கோயில் எழுப்பினார் ராஜேந்திர சோழன். தந்தை மற்றும் தாய் மீது அளவுக்கு அதிகமாக அன்பு வைத்திருந்தாலும் தனது சித்தியின் தியாகத்தை நினைவு கூறுவே அவருக்கென்று தனியாகக் கோயில் கட்டினார் ராஜேந்திரசோழன்.
No comments:
Post a Comment