'என்ன... உங்கள் மகனின் ஆட்சி இப்படி உள்ளது?' என, மின்வாரிய ஊழியர் ஒருவர் புலம்பும் வீடியோ காட்சிகள், வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
''ஒரு சரண்டர் இல்லை; டி.ஏ., அரியர், இல்லை. எந்த விதமான பண உதவியும் வாரியம் வாயிலாக கிடைப்பதில்லை. என்ன... உங்கள் மகனுடைய ஆட்சி இப்படி உள்ளது. கேட்டால், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என பதவி ஏற்கிறார். நாங்கள் யாரிடம் போய் கேட்பது? நீங்கள் இருக்கும்போது எந்த அரசு ஊழியராவது கண்ணீர் வடித்தார்களா?
அரசு ஊழியருக்குதான் முதல் முக்கியத்துவம் கொடுத்தீர்கள். ஆனால், உங்கள் மகன் எங்களை பாடாய் படுத்தி வருகிறார். நீங்கள் கனவில் சென்று, சரண்டர், டி.ஏ., அரியர் கொடுக்குமாறு, உங்கள் மகனிடம் சொல்லி எங்கள் வாழ்க்கைக்கான வழிமுறையை தேடி கொடுக்க வேண்டும். கொரோனா காலத்தில் உயிரை பணயம் வைத்து வேலை பார்த்தோம். எங்களை முன்களப் பணியாளராக கூட அறிவிக்கவில்லை.
எதுவுமே கிடைக்க வழியில்லாமல் எங்களை 'அய்யோ' கதியில் விட்டு சென்று விட்டீர்களே!'' என, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்துக்கு முன் அமர்ந்தபடி புலம்புகிறார், அந்த ஊழியர்.
வீடியோவில் உள்ள, முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்தில், தமிழ்நாடு மின் கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கம், ஸ்ரீவில்லிபுத்துார் கோட்டம் என்று உள்ளது. இந்த வீடியோ காட்சிகள், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
No comments:
Post a Comment