"குருவே, எனக்கு வேதப்பியாசம் செய்து வைத்து என்னை தங்களது சீடனாக ஏற்க வேண்டுகிறேன்." வணங்கி நின்ற சிறுவனை வாஞ்சையோடு பார்க்கிறாரார் கௌதம ரிஷி.
"சிறுவனே, நீ யாரப்பா? உனது பெயர் என்ன? உனது தாய்தந்தையரை பற்றி சொல்" என்றார் கௌதமர்.
"குருவே, எனது பெயர் சத்தியகாமன். எனது தாயின் பெயர் ஜபாலா. தந்தையின் பெயர் தெரியாது" என்றான் சிறுவன்.
சுற்றியிருந்த சீடர்கள் அனைவரும் 'கொல்'லென்று சிரிக்க, அவர்களை அதட்டி அமைதியாக்கியபின், அதைப்பற்றி சற்றும் கவலைப்படாமல் நின்றிருந்த சத்தியகாமனை ஆச்சரியத்துடன் நோக்கிய கௌதமர் மிக்க வாஞ்சையுடன், "குழந்தாய் நீ சிறுவன் என்பதால் உனது தந்தையை பற்றி நீ அறியாதிருக்கலாம். போய் உன் தாயிடம் உன் தந்தை பற்றிய விவரங்களை கேட்டு வா" என்று அவனது தாயிடம் அனுப்புகிறார்.
தாயிடம் சென்று நடந்த விபரங்களை கூறினான் சத்தியகாமன். அதற்கு "என் இளமை பருவத்தில் நான் பலவிதமான பணிகளில் ஈடுபட்டிருந்தேன். யார் யாரையோ சந்தித்தேன். அந்த காலத்தில்தான் உன்னை பெற்றேன். உன் தந்தை யார் என்று எனக்கு தெரியாது. என் பெயர் ஜபாலா. உன் பெயர் சத்தியகாமன். ஆகையால் குருவிடம் சென்று சத்யகாமன் என்ற ஜாபாலன் என்று மட்டும் உன்னை அறிமுகப்படுத்திக் கொள்வாயாக' என்று சொல்லி (ஜபலாவின் மகன் என்பதால் ஜாபலன்.) தன் மகனை கௌதமரிடம் அனுப்புகிறாள் ஜாபாலி.
கௌதமரை அணுகிய சத்யகாமன், தாய் கூறியதை சொல்லி வணங்கி நின்றான்.
சத்தியத்தையும், நேர்மையையும், அதை வெளிப்படுத்துகின்ற துணிவையையும் இந்த சிறிய வயதிலேயே இவ்வளவு ஆழமாக கடைபிடிக்கிறான் என்றால், வளர்ந்த பின் சத்தியத்தை காக்க எத்தனை நெஞ்சுறுதி கொண்டவனாக இவன் பரிமளிப்பான் என்று வியந்த கௌதமர் "உண்மையை இவ்வளவு தெளிவுடனும், உறுதியுடனும் கூறுகிற உன்னை பிராமணன் அல்ல என்று சொன்னால் - அது தகுதியற்ற வார்த்தையாக இருக்கும். ஆழமான சிந்தனையை உடையவனே! போய் ஸமித்துகளை (சுள்ளிகளை, யாக குச்சிகளை) கொண்டி வா. உனக்கு நான் உபநயனம் செய்விக்கிறேன். நீ ஸத்தியத்திலி்ருந்து விலகாதவன். உன்னை என் சிஷ்யனாக ஏற்கிறேன்" என்று சொல்லி தனது ஆஸ்ரமத்தில் ஏற்றிக்கொண்டார்.
ஓர் விபச்சாரியின் மகனைக்கூட அதி உன்னத நிலைக்கு இட்டுச்செல்வதுதான் சநாதனம், இந்து மதம்.
இந்து என்றால் சூத்ரன்; சூத்ரன் என்றால் விபச்சாரி மகன்; இந்துவாக இருக்கும் வரையில் நீயும் ஒரு விபச்சாரியின் மகனே என
குரைக்கும் நாய்கள் தூக்கி வீசியெறியும் எலும்பு துண்டுகளுக்காக எச்சில் சொட்ட நாக்கை தொங்கப் போட்டுக்கொண்டு அலையட்டும்.
நாயும் நக்கிப் பிழைக்குமோ இப்படியோர் நீசப் பிழைப்பு?
நாம் சந்தன மரக் காட்டின் நறுமணம் முகர்வோம்..!
No comments:
Post a Comment