Thursday, September 29, 2022

அரசியல்வாதிகள்!

  நம் நாட்டில் உள்ள நீதிமன்றங்களில், கோடிக்கணக்கான வழக்குகள் தேங்கிஉள்ளதையும், அவற்றை பைசல் செய்யவே பல ஆண்டுகள் ஆகும் என்பதையும் அனைவருமே அறிவர். சில வழக்குகளில் மனுதாரரும், குற்றம் சுமத்தப்பட்டவரும் இறந்த பிறகே, வழக்குகளை விசாரணைக்கு எடுக்கும் பரிதாப நிலை உள்ளது. இந்நிலையில், ஹைதரா பாதில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரமணா, 'நீதிமன்றங்களில் அரசு தான் மிகப்பெரிய மனுதாரராக இருந்து வருகிறது.'அரசு சார்பாக, அரசியல்வாதிகள் சார்பாக, வழக்குகள் தாக்கல் செய்வதை நிறுத்தினாலே, நீதித் துறையின் பாதி பிரச்னைகள் தீர்ந்து விடும்' என்று கூறியுள்ளார். உண்மை தானே... அரசியல்வாதிகளும், அதிகாரிகளும், 'ஈகோ' காரணமாக 'நீயா, நானா?' போட்டியில், நீதிமன்றங்களின் கதவுகளை தட்டுவது, சமீப ஆண்டுகளாக பெருகி, அதுவே வாடிக்கையாகி உள்ளது. சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் ஒருவர், 'பாப்புலாரிட்டி குறையும் அரசியல்வாதிகள், நீதிமன்றங்கள் வாயிலாக அவற்றை பெற முயற்சி செய்யக்கூடாது' என்று சமீபத்தில் கருத்து தெரிவித்தது, கவனத்தில் கொள்ளத்தக்கது. எனவே, நீதிபதிகளின் இந்தக் கருத்துகளை கவனத்தில் கொண்டு, அரசியல்வாதிகளும், அதிகாரிகளும், தொழில் முனைவோரும் செயல்பட்டால், சமதர்ம சமுதாயத்தை மலரச் செய்யலாம். நீதிமன்றங்களில் வழக்கு தேங்குவதை கணிசமாகக் குறைக்கலாம்; தாமதங்களையும் தவிர்க்கலாம். 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...