Thursday, September 29, 2022

கழக ஆட்சிக்கு உடன் பிறப்புக்களே 'சத்ரு!'

  'தமிழகத்தில் காலுான்றி விட வேண்டும் என்று நினைக்கிற மத வெறி நச்சு சக்திகள், 'திராவிட மாடல்' ஆட்சிக்கு எப்படியாவது அவப்பெயர் ஏற்படுத்தி விடவேண்டும் என்ற நோக்கத்தில், மக்களிடையே குழப்பத்தை உண்டாக்கி, கலகம் விளைவிக்க பார்க்கின்றன. அதற்காக கட்சி நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் -எம்.பி.,க்களின் பேச்சுக்களை வெட்டியும், ஒட்டியும், குறிப்பிட்ட சில பகுதிகளை தவறாக பொருள்படியான வாசகங்களுடன் வெளியிட்டு வருகின்றன.


'அவற்றை தங்களுக்கான வாய்ப்பாக பயன்படுத்த நினைக்கின்றன. அவர்கள் வெற்று அகப்பைகள். அதனால், வேகமாக சுழல்கின்றனர். நம் கையில் ஆட்சி, மக்கள் நலன் எனும் அரிசியும், பருப்பும் கொண்ட அகப்பையை வைத்திருக்கிறோம்' என்று கூறியிருக்கிறார், முதல்வர் ஸ்டாலின்.ஆனால், கழகத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த, எதிர்க்கட்சிகள் எதுவுமே தேவையில்லை; சொந்தக் கட்சியினரே போதும். நாம் அதிகமாக விவரிக்க வேண்டிய அவசியமில்லை. ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதை போல, கழக அமைச்சர்களில் ஒருவரான பொன்முடியின் பேச்சை மட்டும் சுட்டிக்காட்டுவோம். 'உங்களுக்கு ரேஷன் கார்டுக்கு, 4,000 ரூபாய் கொடுத்தாரு; வாங்குனீங்களா இல்லையா...வாயை திறங்க; இப்போ பஸ்ல எப்படி போறீங்க, எல்லாரும், 'ஓசி'யில் பயணிக்கிறீங்க' என்று பொதுக் கூட்டம் ஒன்றில், பெண்களை பார்த்து கேட்டிருக்கிறார் அவர். ரேஷன் கார்டுக்கு கொடுத்த, 4,000 ரூபாயும், பஸ்களில் பெண்கள், 'ஓசி'யில் பயணம் செய்வதற்கு உண்டான தொகையையும், கழக அறக்கட்டளையில் இருந்தோ, முதல்வரின் வங்கி சேமிப்பில் இருந்தோ, அமைச்சர்கள், கழக நிர்வாகிகள், எம்.எல்.ஏ.,-க்கள், எம்.பி.,க் களின் மணிபர்சில் இருந்தோ எடுத்து கொடுக்கவில்லை; அத்தனையும் மக்களின் வரிப்பணம். இப்படித் தான், தி.மு.க.,வினர் பலர் மனம் போனபடி, இஷ்டத்துக்கு பேசி வருகின்றனர். மக்களின் வரிப் பணத்தில் கொடுப்பதையே, ஏதோ தங்கள் சொந்த காசை போட்டு கொடுப்பது போல, படம் காட்டுவது மக்களுக்கு தெரியாமல் இல்லை.கழகம் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது முதல் செய்து கொண்டிருக்கும், அத்தனை அநியாயங்களையும், மக்கள் கணக்கெடுத்துக் கொண்டு தான் வருகின்றனர். என்ன? மக்களால் உங்களின் கழுத்தைப் பிடித்து தள்ளி, ஆட்சிக் கட்டிலில் இருந்து அகற்ற முடியாது. அந்த இறுமாப்பு தான் இப்படியெல்லாம், உங்களை பேசத் துாண்டுகிறது.மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., சொன்னது போல, 'ரைட்டு ரீகால்' என்ற, மக்கள் பிரதிநிதிகளை திருப்பி அழைக்கும் உரிமை மட்டும் அமலில் இருந்திருந்தால், கழகம் ஆட்சி பீடத்தில் இருந்து, எப்போதோ கழற்றி விடப்பட்டிருக்கும். என்ன செய்ய... அந்த சட்டம் அமலுக்கு வரவில்லையே.கழக ஆட்சிக்கு களங்கம் ஏற்படுத்த, மதவெறி நச்சு சக்திகள் எதுவும் தேவைஇல்லை. கழக உடன்பிறப்புக்களும், கழக கண்மணிகளுமே போதும்... அனாவசியமாக அடுத்தவர் மீது குற்றம் சுமத்தி, குளிர் காய முயலாதீர்கள் முதல்வரே.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...