அவளை சந்தோஷமாக வைத்து இருக்க வில்லை என்றால்
பிறர் முன் தாழ்த்தி பேசுவது
பொருளாதார ரீதியாக அவள் சம்பாதித்தாலும் இல்லை என்றாலும் அவன் வீட்டுக்கு அவள் தான் அரசி என்ற இடத்தை தராது இருப்பது
சந்தேகப்படுவது - பெரும்பாலும் தன்னை பற்றி மிகவும் குறைவாக எடை போடும் ஆண்களே (inferiority complex) சந்தேக புத்தி கொண்டவர்களாக தன் மனைவியின் வாழ்க்கையை நரகம் ஆக்குகிறார்கள்
சில தேவைகள் எவ்வளவு பணம் கொடுத்தாலும் ஈடு ஆகாது - மனைவியின் முக்கிய தேவைகள் என்ன என்று தெரிந்து அதனை கொடுக்க தவறும் பொழுது வெறுப்பாள்
பல நாட்கள் வார கணக்கில் முக்கிய பேச்சுவார்த்தைகள் இல்லாமல் இருப்பது. மனைவிக்கு பேச்சு சுதந்திரம் மற்றும் நட்பான பேச்சு ரொம்ப முக்கியம். அவள் தனிமையை படுக்கை அறையை விட பேசவில்லை என்றால் இன்னும் உணர்வாள்
கடுமையான கோபக்காரன் நான் என்ற பெருமை எல்லாம் ஊரார் கிட்ட வாங்கி அதே பெருமை இவளிடமும் வாங்க வேண்டும் என்று நினைத்தால் - அவளின் வெறுப்பு தான் மிஞ்சும். கோபக்காரன் முரடன் எப்படி வெளியில் இருந்தாலும் மனைவியிடம் காதலுடன் இருப்பது அவசியம்
பெண்ணின் உணர்வுகள் அதிக ஏற்ற இறக்கம் கொண்டது என்பது உண்மை. அதனால் பிறர் முன் விட்டு கொடுக்காமல் இருந்தாலும், அவளின் உயர்வு தாழ்வுக்கு கொஞ்ச வருடங்கள் புரிந்து கொண்டாலும், அவள் உங்களுக்கு கிடைத்த பொக்கிஷமாக மாறுவாள். ஆகவே அந்த முதல் சில வருடங்களில் - "இவள் இப்படித்தான்", "இவள் சோம்பேறி", "இவள் முடிவு எடுக்க தெரியாதவள்" இப்படி எல்லாம் பட்டம் கட்டி இன்னும் அடுத்த படி எல்லோர் முன்னரும் சொன்னால் - அவங்க எப்படி விரும்புவாங்க?
உங்கள் வாழ்க்கையை உயர்த்தவோ தாழ்த்தவோ அவர்கள் வரவில்லை. பங்கு கொள்ளவே வந்தார்கள் என்பதை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் தனி திறன்கள் தான் வேலை சம்பளம் உயர்வு எல்லாத்துக்கும், "நீ வந்த வேளை என்றோ", "நீ என்ன செஞ்ச என் முன்னேற்றத்திற்கு?" என்றோ கேள்வி கேட்டு கொண்டு இருந்தால் ? பிரச்சனை எங்கே என்று விளங்கவில்லை என்பதே உண்மை
No comments:
Post a Comment