யானை எப்படி இருக்கும் என்பது, நம் எல்லாருக்கும் தெரியும். ஆனால், பார்வையற்றவர்களால் யானையை பார்க்க முடியாது என்பதால், அதை தொட்டுப் பார்த்து தான் கருத்து சொல்ல முடியும். அப்படி நான்கு பார்வையற்றவர்கள், யானையை தொட்டுப் பார்த்து, ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கருத்து சொன்னதாக கதை உண்டு.
அப்படித்தான் சில நாட்களாக, மனு தர்மம், சனாதனம் என்ற இரண்டு சொற்களும் பரவலாக உலா வரத் துவங்கியுள்ளன. இந்த இரண்டு வார்த்தைகளும் உலா வர சிரத்தையெடுத்து செயல்பட்டவர், தி.மு.க., - எம்.பி., - ஆ.ராஜா. மனுதர்ம சாஸ்திரத்தில், 'ஹிந்துக்கள் அனைவருமே விபச்சாரிகளின் மகன்கள்' என்று குறிப்பிட்டு இருப்பதாக புளுகுகிறார் அவர். தன் கூற்றுக்கு ஆதாரமாக, திராவிட கழகம் சார்பில், கி.வீரமணி எழுதி, விடுதலை பதிப்பகம் வெளியிட்டுள்ள, 'அசல் மனுதர்மம்' என்ற புத்தகத்தை காட்டுகிறார். அசல் மனுதர்மம் என்றால், 'டூப்ளிகேட்' மனுதர்மம் என்று ஒன்று உள்ளது போலும்.
இப்போது யானையை தடவிப் பார்த்து, பார்வையற்றவர்கள் கருத்து சொன்ன கதையை நினைவுக்கு கொண்டு வாருங்கள். மனுதர்ம சாஸ்திரம் என்பது, சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட ஒரு நுால்; எழுதப்பட்ட என்பது கூட தவறு.இதிகாச புராண காலங்களில் இவை போன்றவை, கர்ண (காது) பரம்பரையாக, காது வழியாக கேட்டு கேட்டே பரவிக் கொண்டிருந்த விஷயங்கள். அந்த மனுதர்ம சாஸ்திரமும், சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட தொகுப்பாகும்.தி.க., வீரமணிக்கு, சமஸ்கிருதம் எழுதவும் தெரியாது; படிக்கவும் தெரியாது; புரிந்து கொள்ளவும் தெரியாது.
ஒரு மொழியை சுத்தமாக தெரிந்திராதவர், எப்படி அந்த மொழியில் வெளியிடப் பட்டுள்ள நுாலின் கருத்தை புரிந்து கொள்ள முடியும்... விளக்கம் சொல்ல முடியும்? எப்படி பார்வையற்றவர்கள் யானையை தொட்டுப் பார்த்தும், தடவிப் பார்த்தும் ஆளாளுக்கு ஒரு கருத்தை சொன்னார்களோ அதுபோல, கி.வீரமணியும் தான்தோன்றித்தனமாக, தன் இஷ்டம் போல வாய்க்கு வந்ததை எல்லாம் எழுதி, புத்தகம் வெளியிட்டு இருக்கிறார்.
அந்த புத்தகத்தை வைத்து, ஆ.ராஜாவும் ஆவேச நடனம் ஆடிக் கொண்டிருக்கிறார். தட்டிக்கேட்க ஆளில்லா விட்டால், தம்பி சண்ட பிரசண்டன் ஆவான் என்ற சொலவடைக்கு ஏற்ப, ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து இருப்பதால், தாங்கள் என்ன சொன்னாலும், மக்கள் மண்டையைமண்டையை ஆட்டி, கேட்டுக் கொண்டிருப்பர் என்ற இறுமாப்பே, இவை போன்றவற்றிற்கு அடிப்படை காரணம். இந்த இறுமாப்பிற்கு, மக்கள் முடிவு கட்டும் நாள் வெகு துாரத்தில் இல்லை.
No comments:
Post a Comment