Tuesday, September 27, 2022

நம் தமிழ் சமூகம்.

 கடந்த வாரம் தமிழகமே வெட்கி தலைகுனிய வேண்டிய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

ஆனால் பெண்ணியவாதிகள், ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் என அனைவராலும் கண்டுகொள்ளப்படாமல் சாதாரணமாக கடந்து செல்லப்பட்டுள்ள வேதனை தரும் விஷயம் இது.
மரக்காணம் அருகே உள்ள கிராமம் ஒன்றில் தாய் இறந்த நிலையில், தந்தையின் பராமரிப்பில் வளர்ந்து வந்த 14 வயதே ஆன சிறுமி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
மகளின் மரணத்தில் சந்தேகம் கொண்ட தந்தையின் புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய காவல்துறை 18 மற்றும் 21 வயது இளைஞர்கள் இருவரை போக்சோவில் கைது செய்து சிறையில் அடைந்துள்ளனர்.
விசாரணையில் சிறுமி ஆறாம் வகுப்பு படிக்கும் போதிருந்தே இரண்டு இளைஞர்களாலும் தனித்தனியே காதல் வளையத்திற்க்குள் வீழ்த்தப்பட்டு, கடந்த இரண்டு ஆண்டுகளாக பாலியல் தொடர்பில் ஆழ்த்தப்பட்டு இருக்கிறாள்.
உடல் ரீதியாக சிறுமியை சிதைத்த இளைஞர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் தெரிந்து கொண்ட பிறகு சிறுமியை உடல் மற்றும் மனரீதியாக செய்த சித்ரவதையின் காரணத்தால் மாணவி தற்கொலை செய்து கொண்டு இருக்கிறாள்.
பிறந்து ஒரு வயது குழந்தை முதல் வயது வித்தியாசம் இன்றி கொடூரமான முறையில் கற்பழிக்கப்பட்டுள்ள சம்பவங்கள் எண்ணிலடங்காது.
ஆனால் பெண்ணுரிமை, புரட்சி குறித்து பேசும் இந்த நவீன யுகத்தில்
வளர வேண்டிய பருவத்தில்
வண்ண வண்ண கனவுகளுடன்
கல்வி சாலைகளில் துறுதுறு என சுற்றி வந்து
உறவுகளின் அன்பில் மூழ்கி
இயற்கையை, உலகை, வாழ்வியலை கற்றுக் கொள்ள வேண்டிய காலத்தில்,
பூப்படைந்த சில மாதங்களிலேயே காதல் என்ற பெயரில் படுக்கையில் வீழ்த்தப்பட்டு
காதலின் அர்த்தம் புரிந்து கொள்ளும் முன்பே
பேடிகளின் காமத்தை தனித்து கொள்ளும் கருவியாகி
வாழ்வை தொலைத்து
நிலை உணர்ந்த போது
செய்வதறியாது திகைத்து
மனம் குமைந்து
வேதனையும், வெட்கமும் சுழற்றி அடிக்க
கடினமான சூழலை எதிர்கொள்ள வழியின்றி
தூக்கு கயிற்றில்
தனது வாழ்வை முடித்து கொண்டு விட்டாள் அந்த குழந்தை.
எவ்வளவு கொடூரமான நிகழ்வு.
இதைப்பற்றி எவ்வளவு எவ்வளவு விவாதங்கள் நடத்தப்பட்டு இருக்க வேண்டும். எத்தனை விஷயங்களை அலசி ஆராய்ந்து, பல நல்வழி பிரச்சாரங்களை முன்னெடுத்திருக்க வேண்டும்.
ஆனால் பத்தோடு பதினொன்றாய்
கருத்தில் கொள்ளாமல்
கடந்து சென்று விட்டது நம் தமிழ் சமூகம்.
ஒருபுறம் பெண்ணியம், புரட்சி, புண்ணாக்கு என்ற வீராவேச பேச்சுக்கள்
மறுபுறம் சுதந்திரம், நவ நாகரீகம், தனி மனித உரிமை என்ற பிதற்றல்கள்
இடையில்
கசக்கி பிழியப்பட்டு
வீசி எறியப்பட்டு, உதாசீனப்படுத்தப்பட்டு ஏனென்றே புரியாமல், உணராமல் வாழ்க்கையை தொலைத்து கருகி போகும் மொட்டுக்கள்.
எத்தனை எத்தனை நவநாகரீக வேஷம் போட்டு
வெற்று நியாயம் பல பேசி
வளர்ந்த சமூகமாக காட்டி கொண்டாலும்
பச்சிளம் பெண் தன்னை பாதுகாத்து கொள்ள சொல்லி தராத மடச் சமூகமாகவும்,
நீட்டி நிமிர்ந்து நிற்கும் சாமானையும்
தறிகெட்டு திறியும் மனதையும்
கால நேரம், நியாயமான ஆசைகள், வாழ்வியல் தர்மங்கள் என சொல்லி ஆண் பிள்ளைகளை
கட்டுப்படுத்த பழக்காத
ரெண்டும் கெட்டான் சமூகமாகவும் இருக்கிறோம் இப்போது.
விரைக்கும் போதெல்லாம், வெடித்து சிதறடிப்பதல்ல - ஆண்மை
மாறாக
நியாயமற்ற ஆசைகளின் பால்
மனம் அலைந்து திரியும் போதெல்லாம்
அதை அடக்கி ஆள்வதே - ஆண்மை
என்று
நமது பையன்களுக்கு கற்றுக் கொடுக்கப் போவது எப்போது?
ஆண் குழந்தைகளுக்கு அறத்தை போதித்து
ஆசைகளின், உணர்வுகளின், உணர்ச்சிகளின் வித்தியாசத்தை உணர்த்தி
அன்பிற்கும் காமத்திற்கும் உள்ள வேறுபாட்டினை புரிய வைத்து
மேம்பட்ட, நல்வழிப்படுத்தபப்பட்ட ஆண்மகனாக
அவனை இந்த உலகத்திற்கு தரவேண்டியதே, இந்த நவயுகத்தில் பெற்றோர்களின் முதற்கடமை.
நெருக்கடி நிறைந்த வாழ்க்கை தான் என்றாலும்
குழந்தைகள் உடன் போதுமான நேரத்தை செலவழியுங்கள்.
அவர்கள் பேசுவதை, அன்புடன் செவி கொடுத்து கேளுங்கள்.
அதில் பல அற்புதங்களும், அவர்கள் முன் இருக்கும் தூண்டில்களையும் நீங்கள் கண்டுணர முடியும்.
இந்த கலியுகத்தில் எவராலும் எவருக்கும் நல்வாழ்க்கை அமைத்து தர முடியாது.
ஆனால் ஒவ்வொருவரும் நல்வாழ்வு வாழ வழி காட்டிட முடியும்.
ஐந்திலேயே வளைக்க முடியும்,
அரட்டி மிரட்டி அல்ல -
'அன்பினால்'

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...