1970s
ஏன்னா! இந்த ஆட்டுக்கல்ல சித்த கொத்தி தர சொல்றேளா. கல்லு ஒரே வழ வழன்னு இருக்கு. இட்லிக்கு மாவு அரைக்க ரொம்ப நாழி ஆறது.
ஏன்னா! எதோ புதுசா கிரைண்டர் அப்படின்னு ஒன்னு வந்திருக்காமே பக்கத்தாத்து பங்கஜம் சொன்னா. கரண்ட்ல வேலை செய்யறதாம். சுவிட்ச் தட்டினா ஒடுமாம். குழவி ஒரே இடத்தில இருக்குமாம். ஆட்டுக்கல்லு சுத்துமாம். டெக்னாலஜி எப்படி வளந்துருத்து பாத்தேளா! எத்தனை நாள் தான் நானும் இந்த பழைய ஆட்டுக்கல்ல வச்சுண்டு மாரடிக்கறது. நேக்கும் ஒரு கிரைண்டர் வாங்கித் தரேளா
1990s
ஏன்னா! கிரைண்டர் குழவி ரொம்ப வெயிட் ஜாஸ்தியா இருக்கு. குழவி தூக்கி தூக்கி நேக்கு மாரடைப்பு வந்துடும் போல இருக்கு. குழவி வெயிட் கம்மியா ஒரு கிரைண்டர் வாங்கித் தாங்கோ!
2000
ஏன்னா! இந்த கிரைண்டர் கல்லு எடுத்து அலம்பறது ரொம்ப சிரமமா இருக்கு. நேக்கு ஒரு டேபிள் டாப் கிரைண்டர் வாங்கி தாங்கோ!
மாவு அரைச்சதும் அப்படியே கிரைண்டர் ஐ கமுத்திக்கலாம். கிரைண்டர் அலம்பறதும் ரொம்ப ஈஸி.
2010
ஏன்னா! ஆபீஸ் லருந்து வரும் போது ஒரு இட்லி மாவு பாக்கெட் வாங்கிண்டு வாங்கோ!
போன வாட்டி நீங்க வாங்கிண்டு வந்த இட்லி மாவு நன்னாவே இல்ல. அப்பறம் இட்லி கலர் இல்ல, சப்பையா இருக்குன்னு என்னை குறை சொல்லப் படாது, கேட்டேளா!
2020
ஏன்னா! சிவிக்கில இல்லாட்டி ஜோமாட்டோல இட்லி ஆர்டர் பண்ணிடுங்கோ
மறக்காம கெட்டி சட்னியும்
2030
No comments:
Post a Comment