விட்டுக் கொடுத்தல்...இக்காலச் சமுதாயம். பொதுவாக இருவர் ஒன்று கூடி வாழத் தொடங்கினாலே கருத்து வேறுபாடுகள் தோன்றிவிடும்...
நண்பர்களாக இருந்தாலும் ,கணவன் மனைவியாக இருந்தாலும் ஒருவொருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்ந்தாலொழிய அவ்வாழ்வு சிறப்பாக அமையாது...
எப்பொழுது ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்வார்...? ஒருவர் மேல் அன்பு பெருகும்போதுதான் என்று கூறத் தேவையில்லை...
நல்லவை கெட்டவை பரிமாற்றம் நிகழும். நம்மைச் சுற்றி எது நடந்தாலும் அது குறித்து தெளிவான பார்வை கிடைக்கும்...
இயன்றவரை மற்றவர்களுக்கு விட்டுக் கொடுங்கள். விட்டுக் கொடுப்பவர்கள் யாரும் கெட்டுப்போவதில்லை. விட்டுக் கொடுக்க வேண்டிய நேரத்தில் அன்புடனே விட்டுகொடுக்க வேண்டும். பிடிவாதம் கூடாது...
எந்த நிகழ்வுகளையும், சிக்கல்களையும் மென்மையாகக் கையாளுங்கள். சில நேரங்களில் சில வருத்தங்களையும் பொறுத்துதான் ஆகவேண்டும் என்று உணருங்கள்...
இப்படியே வேலை செய்யும் இடமாகட்டும், மாமியார்- மருமகள் உறவிலாகட்டும், கணவன்-மனைவி உறவுவாகட்டும் இங்கெல்லாம் உறவு முறை கெடுவதற்கு இந்த பிடிவாத குணமே காரணம்...
நண்பர்கள் இடையே பிரிவு வருவதும் இந்த எண்ணதினால்தான்.இன்றிருப்போர் நாளை இருப்பதில்லை என்றிருக்க, நம்முள் ஏன் இந்த பிடிவாதகுணம்...விட்டுக்கொடுத்தால்வேதனைஇல்லை. வேதனை இல்லா வாழ்வு சோதனை ஆகாது. விட்டு கொடுத்தலில் நாம் இழப்பது ஒன்றுமில்லை. அடைவதுதான் அதிகம்...
விட்டுக் கொடுப்பதால் நம் உறவை வலிமைப் படுத்துகிறோம், நண்பர்களை உறவாக்கிக் கொள்கிறோம். பகைமையை விரட்டுகிறோம். விட்டு கொடுத்தலில் விவேகம் உண்டு. வாழ்க்கையை வளமாக்கும் வழியும் உண்டு...
No comments:
Post a Comment