Friday, September 30, 2022

தி.மு.க., - ஈ.வெ.ரா., ஏட்டிக்கு போட்டி: மறக்க முடியுமா?

 தங்களுக்கு ஈ.வெ.ரா., தான் பெரிய தலைவர் என்றும், ஈ.வெ.ரா., கண்டுபிடித்த திராவிட கொள்கையை தூக்கி பிடிப்பது தாங்கள் தான் என்றும், ஈ.வெ.ரா.,வை பின்பற்றுவதால் ஹிந்து மத எதிர்ப்பு அரசியல் செய்வதாகவும், ஈ.வெ.ரா., பாணியில் தமிழர்களை காப்பாற்ற வந்த ஒரே கட்சி தாங்கள் தான் என்றும் மார்தட்டி கொண்டிருக்கிறது தி.மு.க.,.

EV Ramasamy, DMK, Karunanidhi, M Karunanidhi, Annadurai, CN Annadurai, திமுக, ஈவெரா, ஏட்டிக்கு போட்டி


அதே தி.மு.க.,வுக்கும் ஈ.வெ.ரா.,வுக்கும் 1950, 60 களில் எப்படியெல்லாம் மோதல் நடந்தது கருத்து வேறுபாடு ஏற்பட்டது என்று தெரிந்தால், இந்த கால இளைஞர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும். இப்போதுள்ள மூத்த தி.மு.க., தலைவர்கள் இந்த விஷயம் நன்கு தெரிந்தே, எல்லாவற்றையும் மறைத்து கொண்டிருக்கிறார்கள்.

1949ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9ம் தேதி ஈ.வெ.ரா., - மணியம்மை திருமணம் நடந்தது. அப்போது ஈ.வெ.ரா.,வுக்கு வயது 72. மணியம்மைக்கு வயது 27. அதுவரை, ஈ.வெ.ரா.,வின் பத்திரிகையில் பணியாற்றி கொண்டிருந்த அண்ணாதுரை, மகள் வயதை ஒட்டிய மணியம்மையை ஈ.வெ.ரா., திருமணம் செய்ததால் அதிருப்தியடைந்து, தனியாக சென்று 1949 செப்., 17ல் தி.மு.க.,வை ஆரம்பித்தார்.


latest tamil news


தனிக்கட்சியை அண்ணாதுரை ஆரம்பித்ததால் பிடிக்காத ஈ.வெ.ரா., ராஜாஜியை ஆதரித்தார். இது தி.மு.க.,விற்கு பிடிக்கவில்லை. எனவே, ஈ.வெ.ரா.,வை விமர்சித்ததுடன், பிராமணர்களை மற்றவர்களுக்கு எதிராக திருப்பிவிட்டு, இவர் மட்டும் பிராமணர்களுடன் உறவாடுவதாக கார்ட்டூன் வெளியிட்டது. மறுநாள், திமுக.,விற்கு எதிராக தனது விடுதலை இதழில் ஈ.வெ.ரா., தாக்கி எழுதினார். இப்படி இரு தரப்பினரும் மாறி மாறி மோதிக்கொண்டனர்.

சில நாட்கள் இது தொடர்ந்தது. ஆனால், இவ்வளவையும் மறந்துவிட்டு, தாங்கள் தான் ஈ.வெ.ரா.,வை காப்பாற்ற வந்தவர்கள் என்பது போல், அவரை தி.மு.க., தலையில் வைத்து கொண்டாடுகிறது. ஒரு காலத்தில் தி.மு.க.,வும் ஈ.வெ.ரா.,வும் எதிரும் புதிருமாக இருந்ததை இப்போது உள்ள தி.மு.க.,வினர் பலரும் மறந்துவிட்டனர் அல்லது வரலாறு தெரியாமல் இருக்கின்றனர்.

இப்படி எல்லாம் ஈ.வெ.ரா., பற்றியும் தி.மு.க., பற்றியும், சமூக வலைதளங்களில் பலர் பகிர்ந்து வருகின்றனர். ஈ.வெ.ரா., பற்றி, முரசொலியில் இடம் பெற்ற கார்ட்டூன் வைரலாகி பரவி வருகிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...