Friday, April 14, 2023

இங்கு திமுக அதிமுக சொத்து சேர்ப்பு அதிகமுள்ள கட்சிகள் ஒன்றாக சேரும் பாருங்கள்.

 அதிகாரத்தில் இல்லாத அண்ணாமலையே இவ்வளவு புள்ளி விவரத்துடன் குற்றச்சாட்டுகளை வெளியிட முடிகிறது எனில், மும்முறை நிறைவாக ஆண்ட , ஆட்சி அதிகாரத்திலிருந்தவர் , கண்ணுக்கெட்டிய தூரத்தில் எதிரிகளே இல்லை என சூளுரைத்தவர் , மக்கள் முதல்வர், நிரந்தர முதல்வர் எனவும், தேனும் பாலும் ஆறாக ஓடுகிற பொற்கால ஆட்சி என தொண்டர்கள் (அ...மைகள் என ஒரு சிலர் சாடுவது போல், கூறமாட்டேன். ஒருபோதும் அப்படி தரமற்ற வார்த்தைகளை அடியேன் உதிர்த்ததில்லை) பட்டம் கொடுக்கப்பட்டவர் , குறிப்பாக, தன்மீது சட்ட நடவடிக்கை எடுத்தவர்கள் மீது , நியாமான குற்றச்சாட்டுகளை மக்களிடம் கொண்டுசெல்ல தவறியவர், குற்றவாளி என உ.நீ. மன்றத்தால் பின்னாளில் கருதப்பட்டவர், ...........இன்னும் பல அடைமொழிகள் கொண்டவர்...

ஏன் ஒரு ஆணியைகூட அகற்ற முயல வில்லை.?
சொல்லப்போனால் அவர் பழிவாங்கும் குணத்தில் ஆற்றல் மிக்கவராக கருதப்பட்டவர். அழிக்கும் சக்தி வாய்ந்தவர் எனகருதப்பட்டவர். அவர் பல வழக்குகள் தொடுத்திருந்திருக்கலாம். பங்காளி கதையை தவிடு பொடியாக்கியிருக்கலாம் .
இதில் வேடிக்கையென்ன வெனில்., அன்னாரின் கண்மூடி ஆதரவாளர்கள் (இன்னும் இருக்கிறார்கள் போல), பொங்குவது...
9 வருடங்களாக மோடி ஏன் அதைச்செய்யவில்லை, இதைச்செய்யவில்லை என்பது...
அதுவும், தான் சார்ந்த சமூகம் எனும் அளவுகோளில் கண்மூடி பாசக்காரர்கள் அதிகம் போல...
மோடியின் குணம் முற்றிலும் மாறுபட்டது. அவர் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடாதவராக கருதப்படுபவர். ஊழலை தடுப்பதாக வாக்கு கொடுத்துள்ளார் . தனது ஆட்சியில் , ஊழல் நடக்காமல் பார்த்துக் கொண்டுள்ளார். இனியும் நடக்காத அளவிற்கு வழிமுறைகளை மாற்றியுள்ளார்.
சொல்லப்போனால், தமிழக அரசியல் களத்தில் , அண்ணாமலை மூலம் , இன்று ஒரு திருப்பம் ஏற்பட வைத்துள்ளார்.
மத்தியில், தொடர்ந்து ஒரே கட்சியின் ஆட்சிப்பீடம் பல வருடங்களாக இருந்துள்ளது. இரண்டாம் கட்ட, மூன்றாம்கட்ட அடுக்குகளில் , அந்த கட்சியால் நியமிக்கப்பட்டவர்கள் இருந்துள்ளனர். குற்ற ஆவணங்கள் மறைக்க, வெளியிடாமல், (வெளியிடப்பட்டாலும், ரகசியத்தைகசிவிட) முட்டுக்கட்டை போட பல லாபிகள் இருந்துள்ளனர். அதனாலும் காலதாமதத்திற்கு காரணியாக , விமர்சனங்களுக்குள்ளாகிறார். இது யதார்த்த உண்மைதான். ஆட்சி பொறுப்பில் இருப்பதால் அவர் விமர்சனத்தை சுமக்க வேண்டிய நிலைதான்.
தமிழக களம் அப்படியல்ல. மாறி மாறி ஆட்சி அமைந்துள்ளதால் , தகவல்கள் கிடைக்க எளிதாகியிருக்கக்கூடும் . 2014 - 2021 , பங்காளி பாசத்தினால் வெளிவராமல் ஆட்சியாளரால் பாதுகாக்கப்பட்டுள்ளது. மேலும் , இங்கு , மத்திய ஆட்சியரின் (இதுவரை இங்கு ) சரியான தலைமை இல்லாதத னாலும் (I repeat, as there was not a proper leadership for the party in TN), இதுவரை இந்தளவிற்கு முன்னெடுக்க இயலவில்லை.
எது எப்படியிருப்பினும் , பங்காளிகள் , தங்கத்தாரகை யின் பாசக்காரர்கள் இங்கே பொங்கத்தான் போகிறார்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...