Friday, April 14, 2023

நமது மக்களை திருத்துவது சாதாரண காரியம் இல்லை. அந்த அளவுக்கு கெட்டுப் போயிருக்கிறது......

 

'சொத்துப் பட்டியலை வெளியிடுவது என்பது எப்படி ஊழலை அம்பலப்படுத்தியது ஆகும்?' என்று பல நண்பர்கள் கேட்டிருக்கிறார்கள். அவர்கள் அறிவுக்கு எட்டிய வரை, அவர்கள் கேட்டது சரியான கேள்வி தான்.

ஆனால், ஜெயலலிதாவின் வழக்கில் என்ன நடந்தது என்பதை நினைத்துப் பார்ப்போமா? முறையான வகையில் அவர் காட்டி இருந்த வருமானத்துக்கும், அவர் பெயரில் இருந்த சொத்துகளின் மதிப்புக்கும் - அதாவது, அவற்றை வாங்கியதாகப் பதிவு செய்திருந்த நாளில் இருந்த சந்தை மதிப்புக்கும் - இடையே பெருத்த இடைவெளி இருந்ததால், அந்தப் பணம் எப்படி வந்தது என்று கேட்டு, அது அவர் வகித்த பதவியை துஷ்பிரயோகம் செய்ததன் வாயிலாகவும், ஊழலின் வாயிலாகவும் ஈட்டிய பணம் என்ற முடிவுக்கு வந்தார்கள். இதை ஆங்கிலத்தில், 'presumptive corruption' என்பார்கள்.

அது போலத் தான், தி.மு.கவில் இருக்கும் அந்நாளைய, இந்நாளைய அமைச்சர்களின் பெயர்களிலும், அவர் தம் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் பெயரிலும் இருக்கும் கணக்கில் காட்டப்படாத சொத்துகள் எல்லாம், ஊழலின் வாயிலாகச் சம்பாதித்தவை என்கிற முடிவுக்கு வர வேண்டும். அதன் படி, ஜெயலலிதாவுக்கு என்ன நடந்ததோ, இவர்களுக்கும் அது மாதிரி சிறைத் தண்டனை, பதவி பறிப்பு, தேர்தலில் போட்டியிடத் தகுதி இழப்பு ஆகியவை எல்லாம் கொடுக்கப்பட வேண்டும்.

இதற்கான நடவடிக்கை சீக்கிரம் தொடங்கப்பட வேண்டும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...