Monday, April 17, 2023

சமன்களின் சாத்தியம்.

 கடந்த காலக் காயங்கள்

மனத்தின்கண்
முத்திரை பதித்து
வலிகளின் ஏகோபித்தலை
நிலைநிறுத்தி நிற்கின்றன
இன்றும்
மாறா வடுக்களாக
கைக்கொள்ளப்பட்ட
எழுதப்படாத
நியாய தருமங்களின்
வழித் தடத்தில்
இன்னமும் இன்னமும்
நெடிது நீள்கின்றன
எனது
பயணச் சறுக்கல்கள்
கையளிக்கப்பட்ட
வாழ்க்கையின் கடினத்தை
எவரிடத்தும் ஒப்புவிக்க
இசையாத நெஞ்சகத்தில்
இறுமாப்பு மட்டுமே
இன்றளவும் கவசத் துணையாக
ஒப்புக் கொடுத்தலுக்கும்
ஒப்புக் கொள்ளுதலுக்குமான
சமன்செய்தலென்பது
விருப்பப் படிநிலைகளின்
கையளிப்பில் மட்டுமே
சாத்தியம்
இருந்தும்...
எனது பயணத்தில்
எனக்கான பாதையின்
நீள அகலங்களின்
வரைவுகளை
தப்பிதமாக
வடிவமைத்துக் கொடுத்தவனிடமே
கரங்களைக் கூப்புகிறேன்
சமன்செய்தலுக்காக....

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...