அண்ணாமலை, திமுக வின் பல முக்கியஸ்தர்களின் மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்களின் சொத்து பட்டியலை அவர் சொன்ன நேரத்தில் வெளியிட்டதோடு அல்லாமல் அதை படித்து விளக்கமும் கொடுத்தார். நிரூபர்களிடம் ஒரு வாரம் இதை நன்றாக படித்துவிட்டு வந்து கேள்வி கேளுங்கள் நான் பதில் சொல்கிறேன் என்று சொல்லியிருப்பது அவரின் நேர்மையான அரசியலை காட்டுவதாகும்.
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Friday, April 14, 2023
எதிர்பாராததை எதிர்பார்ப்போம்.
சரி அடுத்ததாக, இதை பார்த்த (you tube ல் அண்ணாமலை பேசியதை பார்த்தவர்கள் குறைவாகத்தான் இருக்கும், இரண்டு மூன்று நாட்களுக்கு பிறகு தான் இது நிறைய மக்களை சென்றடையும்) மக்களிடம் இதுவரை பெரிய reaction இல்லை என்பது ஒரு புறம் மற்றொரு புரம் "இதெல்லாம் தெரிந்த ஒன்று தான் - ஊழல் ன்னு சொன்னாரே அதை பற்றி ஏதும் சொல்லவில்லை என்று அங்கலாய்கும் கூட்டமும் இருக்கத்தான் செய்கிறது.
இதிலிருந்து ஒன்று தெரிகிறது ஊழல் அரசியல்வாதிகளிடம் மட்டும் இல்லை மக்களிடமும் இருக்கிறது. திமுக, தவறு தவறு, காங்கரஸ் மற்றும் திராவிட அரசுகள் விதைத்த ஊழல் செடியாகி கொடியாகி இன்று மரமாக மக்களோடு மக்களாய் வளர்ந்து நிற்கிறது. ஏன் சொல்கிறேன் என்றால் நம் மனத்திறையில் ஓடிக்கொண்டிருந்த ஒரு கேள்விக்கு இன்று அண்ணாமலை இன்று உயிர் கொடுத்திருக்கிறார். திரும்பிய பக்கமெல்லாம் அரசியல்வாதிகளின் பள்ளிகள், பொரியியல், மருத்துவம் மற்றும் அதை சார்ந்த கல்லூரிகள் - இதுவரை நாம் கேள்விபடாத ஆனால் தினமும் பார்த்து கொண்டுவரும் முதலீடுகள் - யாரை கேட்டாலும் 500 கோடி, 5000 கோடி, 10,000 கோடி
இங்கு மக்களாகிய நாம் 40 வருடம் உழைத்தாலும் கண்டெதெல்லாம் தெருகோடி தான்.
அண்ணாமலை அவர்களின் பெயரில் உள்ள அசையா சொத்துக்களை ஆதாரபூர்வமாக பட்டியல் போட்டுவிட்டார். இதுவரை தமிழக அரசியலில் ஒருவரும் செய்யாத ஒன்றை துணிச்சலாக பாரதியின் பாட்டுக்கிணங்க "அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே - உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே" பாணியில்
இனி மக்கள் செய்யவேண்டியது அண்ணாமலை சொன்னதை முழுவதும் கேட்டு இது 30, 40 ஆண்டு கால அரசியல் வாழ்வில் இதெல்லாம் சாத்தியமாகுமா - காமராஜரும் கக்கனும், இன்றைய அரசியலில் பாலபாரதியை போன்றவர்களின் வாழ்கையை நினைத்து பார்த்து உங்களின் மனதில் கேட்டு பாருங்கள்
திமுக சார்பாக பாரதி வில்சன் ஆகியோர் பத்திரிகையாளர்களிடம் மிகவும் relaxed ஆக ஒரு பேட்டியை அளித்திருப்பதை நீங்கள் பார்க்கலாம். அதில் ஒன்று தெளிவாக தெரிகிறது "இவர்களும் எதையோ மிகவும் எதிர்பார்த்திருக்கிறார்கள்" என்பதும் இவர்கள் பயந்ததை போல் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் நடக்கவில்லை என்றவுடன் நிம்மதி பெருமூச்சுடன் "திமுக வின் சொத்து சேர்த்திருக்கும் கோமான்களுக்காக" பேச வைத்திருக்கிறார்கள். பரிதாபம்.
இந்த சொத்து எப்படி வந்தது - இவர்களின் வருமானத்திற்கு உட்பட்டதா - அல்லது வருமானத்திற்கு அதிகமானதா - என்பதை
இனி அமலாக்கத்துறையோ வருமான வரித்துறையோ அல்லது லஞ்ச ஒழிப்பு துறையோ தான் இதை கையிலெடுக்க முடியும்.
அண்ணாமலை இன்று மக்கள் மன்றத்திடம் வைத்திருப்பது பூமிக்கடியில் பூகம்பம் மையம் கொண்டிருப்பதை போல, அதன் விளைவு போக போக பார்ப்போம்.
கடைசியாக ஒன்று வல்லமை படைத்த அரசியல்வாதிகளின் சொத்துக்கள் பட்டியலை வெளி கொணர்ந்த அண்ணாமலைக்கு தமிழக அரசின் துறை சார்ந்த அதிகாரிகளின் ஊழலை வெளிக்கொணர ரொம்ப சிரமபடமாட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...
-
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள்தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள் இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ...
No comments:
Post a Comment