காளமேகப்புலவர் கூறியதாவது...
யமகண்டம் என்பது "பூமியில் பெருநெருப்பு ஒன்றை வளர்த்து அதன் மேல் கொப்பறை நிறைய எண்ணெய் விட்டு அதில் அரக்கு, மெழுகு, குங்குலியம், கந்தகம், சாம்பிராணி என யாவும் கொதித்துக் கொண்டிருக்க வேண்டும். அந்தக் கொப்பரைக்கு மேலே உறிகட்டி அதன் மேலே பாட்டுப் பாடும் புலவர் ஏறி நிற்க வேண்டும். அவரைச் சுற்றி நான்கு திசையிலிலும் நான்கு நான்காகக் கத்திகள் சங்கிலியால் இணைக்கப்பட்டு அவை நான்கு யானைகளின் துதிக்கையில் கட்ட வேண்டும்.
உறியில் இருக்கும் புலவர், எவரெவர் என்னென்ன பொருள் கொடுத்தாலும், அந்நொடியில் அந்தப் பொருளைப் பற்றி தடையின்றிப் பாட வேண்டும். அவ்வாறு பாடும்போது சிறிதளவு வழுவினாலும் பாடச் சொன்னவர்கள் யானைப் பாகர்களுக்குக் கண்ணசைவை காட்டுவர். அவர்கள் யானைகளின் மத்தகத்தில் அங்குசத்தால் குத்தி அதட்டுவர். அந்த யானைகள் சங்கிலிகளை விசையுடன் இழுக்கும்போது. புலவனின் கழுத்தும் இடுப்பும் கத்திகளால் துண்டிக்கப்படும். தலையொரு துண்டமும் இடுப்பு முதல் கால் வரை ஒரு துண்டாகி, அந்த எண்ணெய்க் கொப்பறையில் விழுந்துவிடும். இதுதான் யமகண்டம்'' என்று விளக்கம் தந்தார் காளமேகப் புலவர்.
குறிப்பாக சொல்ல வேண்டும் எனில் "அபிராமி அந்தாதி" பாடிய அந்த சூழ்நிலைதான் அபிராம பட்டருக்கு யமகண்ட நேரம் ஆகும்.
No comments:
Post a Comment