Tuesday, May 2, 2023

இந்த செய்தி உண்மையா?

 பிரசித்தியான அல்லது பிரசித்தியாக்கபட்ட சீரடி சாய்பாபா கோவில் காலவரையின்றி மூடபடுவதாக அதன் நிர்வாக அமைப்பான ஸ்ரீ சாய்பாபா சன்ஸ்தான் அறக்கட்டளை தெரிவித்துள்ளது

அந்த சாய்பாபா ஒரு சுபி வழி சாயல் கொண்ட துறவி, அக்காலத்தில் பல துறவியர் இப்படி இருந்தார்கள், இந்துக்களின் சித்தர் சாயலில் இஸ்லாமியரில் பலர் இருந்தார்கள்
ஷிரடி சாய்பாபா அந்த சாயல் கொண்டவர், அவரின் முழு வரலாறும் யாருக்கும் தெரியாது, எங்கே பிறந்தார் எங்கே ஞானம் பெற்றார் என்பதெல்லாம் இன்றுவரை மர்மம்
ஆனால் பக்தர்கள் அதிகம், அவரை பற்றிய நம்பிக்கை அதிகம்
அந்த ஷிரடிக்கு எல்லாமத பக்தர்களும் வருவார்கள் இஸ்லாமியர் நிரம்ப வருவார்கள்
இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கும் இந்த சாய்பாபா மையமும் அதன் பக்தர்களும் அதிகம், மாபெரும் அறகாரியங்களை செய்வார்கள், பணம் அதிகம் செல்வாக்கும் அதிகம், பிரமாண்ட ஆலயங்களை நொடியில் கட்டும் வல்லமை அதிகம்
இந்துக்கள் சாயலில் பாபா வழிபடபடுவதால் இந்துக்களும் தயக்கமின்றி ஏற்று கொண்டார்கள்
இப்போது சர்ச்சை அந்த ஸ்ரீ சாய்பாபா சன்ஸ்தான் அறக்கட்டளை வடிவில் வருகின்றது
பக்தர்கள் அதிகம் வரும் இடம் என்பதால் மத்திய அரசு அங்கு காவலை வலுபடுத்த மத்திய தொழிற்படை பாதுகாப்பை வழங்கியது
இது ஒன்றும் ஆச்சரியமல்ல , மதுரை மீனாட்சியம்மன் ஆலயம் கூட அப்படித்தான் காக்கபடுகின்றது
ஆனால் இந்த ஸ்ரீ சாய்பாபா சன்ஸ்தான் அறக்கட்டளை அமைப்பு இதனை எதிர்க்கின்றது, காவல் வேண்டாம் என கண்டித்து ஆலயத்தையே மூடிவிட்டது
இதுதான் இப்போது பலத்த சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது
நல்ல ஆன்மீக அமைப்பென்றால் இதற்கு சந்தோஷபட்டு வரவேற்கலாம், நிச்சயம் பாதுகாப்பு படைகள் அவர்கள் நிர்வாகத்திலோ வழிபாட்டிலோ தலையிட போவதில்லை காவல் ஒன்றுதான் செய்வார்கள்
அதை செய்யாதே என ஏன் இவர்கள் பொங்கவேண்டும் என்பதில்தான் பெரும் மர்மம் அடங்கியுள்ளது
ஆக ஏதோ சரியில்லை என்பது தெரிகின்றது, இது சாதாரண விஷயமாக இல்லை அடுத்தடுத்து பெரும் அதிர்ச்சியான செய்திகள் வெளிவந்தாலும் ஆச்சரியமில்லை
சாய்பாபா பக்தி திருவண்ணாமலை ரிஷிகள் போல இன்னும் சில இந்திய மகான்கள் கல்லறை போல சாதாரணமாகத்தான் அதாவது 1950க்கு முன்புவரை இருந்திருக்கின்றது, பலருக்கு அதுபற்றி தெரியாது
அதன் குபீர் வளர்ச்சி பின்னாளில்தான் இருந்திருக்கின்றது, அதன் பின்னணியில் ஏதோ மிகபெரிய சக்தி இருந்திருக்கலாம் அந்த சக்தி இந்த காவலை விரும்பாமல் எதிர்க்கலாம்
என்னை காவல் காக்காதே, நான் செய்வதை கண்காணிக்காதே என ஒரு குரல் உயருமானால் அங்கு ஏதோ சரியில்லை என்பதை கணிப்பது எளிது
பாபா பக்தர்கள் குழம்பி நிற்கும் நேரமிது, அவர்களுக்கான தெளிவினை மூல ஞானபரம்பொருள் அருளட்டும், ஞானமும் தெளிவும் பெருகட்டும்
அந்த பெரிய பொட்டு பெண்மணியும் சாய்பாபா பக்தி கொண்டவர் என்பது கூடுதல் தகவல்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...