பொன்னியின் செல்வன் போன்ற தவறான திரைப்படங்கள் வருவதற்கு முன்னோடி திராவிடர்கள் எடுத்த பூம்புகார், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் போன்ற படங்கள்.
உங்களுக்கு ஒரு வரலாற்று உண்மையை சொல்லுகிறேன்.
இந்த கோவில் யாரால் கட்டப்பட்டது என்று நமக்கு யாருக்காவது தெரியுமா? தெரியாது.
கிபி ஏழாம் நூற்றாண்டில், பல்லவ மன்னர்களால் கட்டுமானம் தொடங்கப்பட்டு, கடைசியாக, "நின்ற சீர் நெடுமாறப் பாண்டிய மன்னனால்" கட்டி முடிக்கப்பட்டது.
இந்தியாவிலே, சிறந்த நீர் மேலாண்மை கொண்ட ஒரு இடம் என்றால், அது திருநெல்வேலிதான். மூன்று கிராமத்திற்கு ஒரு குளம் இருப்பது திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் தான்.நெல்லையப்பர் கோவிலைக் கட்டிய, நின்ற சீர் நெடுமாறப் பாண்டிய மன்னனின் ஆட்சிகாலத்தில் தான், ஆறுகள் பல்வேறு கிளை நதிகளாகப் பிரிக்கப்பட்டு, பாசனப்பகுதி பெருகி காணப்பட்டது.
அப்படி திருநெல்வேலியையே செழிப்படைய செய்த மன்னன் தான், நின்ற சீர் நெடுமாறப்பாண்டியன்.
அந்த, நின்ற சீர் நெடுமாறப் பாண்டியனுக்கு நாம் செய்த மரியாதை என்ன பாடப்புத்தகத்தில் கூட அவரது பெயரை இல்லை!
அவருக்கு ஒரு சிலை தான் வைத்தோமா?
இல்லை. இங்கு சிலையாக நிற்பதெல்லாம்.,
ஈ வெ ரா , அண்ணாதுரை, எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி, மற்றும் அவரது பேனா!!
கோவலனுக்குத் தவறான நீதியை வழங்கிவிட்டதால், தன் உயிரையே மாய்த்துக் கொண்டவன், நெடுஞ்செழியப் பாண்டியன்.
எப்பேர்ப்பட்ட உத்தமனாக இருந்தால், தான் வழங்கிய தவறான நீதிக்காக தன் உயிரையே விட்டிருப்பான்?
அந்த நெடுஞ்செழியப் பாண்டியனுக்கு ஒரு அடையாளமோ, மரியாதையை கொடுக்காமல், கோவலன் கண்ணகி மாதவி மணிமேகலை என்று புத்த மத காப்பியமான சிலப்பதிகாரம் சொல்வதை வைத்து அவர்களுக்கு சிலை எழுப்பி, சென்னை மெரினா கடற்கரையில் கண்ணகி சிலையை வைத்திருக்கிறோம்.
கண்ணகி சிலை வைத்தது தவறல்ல, ஆனால் பாண்டிய மன்னன் சிலை வைக்காமல் கண்ணகி சிலை வைத்தது ஏனென்றால், கலைஞர் கருணாநிதி பூம்புகார் என்ற திரைப்படம் எழுதி அதில் தன் எழுத்துக்களை கருத்துக்களை வரலாற்றில் திரித்ததுதான்!
இப்படி பாண்டிய மன்னர்களுக்கு சோழ மன்னர்களுக்கு அவர்களுக்குரிய மரியாதை கிடைக்காமல் போனதற்கு காரணம் திராவிடர்கள் தமிழ் திரைப்படங்கள் எடுக்க ஆரம்பித்ததுதான்.
முகலாய மன்னர்களை காங்கிரஸ்காரர்கள் வட இந்தியாவில் குத்தகை எடுத்துக் கொண்டது போல், அதிமுக திமுக என்ற திராவிட சண்டையை திமுக காரர்கள் சோழர்கள், அதிமுக காரர்கள் பாண்டியர்கள் என்று மாற்றி அமைத்தார்கள் எம்ஜிஆர் மற்றும் கருணாநிதி இருவரும்!
அப்போது எம்ஜிஆர் முதலமைச்சரான நேரம். எனக்கு அரசியல் அவ்வளவு தெரியாது. ( எனக்கு ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது அரசியல் தெரியும் என்று ரீல் விட நான் தயார் இல்லை ).
ராஜராஜ சோழன், பார்த்திபன் கனவு போன்ற திரைப்படங்கள் போல் கிடையாது எம்ஜிஆர் படங்கள். அவர் அரசியல் பிரச்சாரம் செய்வதற்காக, மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் திரைப்படம் எடுத்திருக்கிறார். அதுதான் அவரது கடைசி படம். அது சரித்திர படம் போல் இருக்காது!கேவலமாக இருக்கும்,
எம்ஜிஆர் தன்னை பாண்டிய மன்னன் என்று சொல்லிக்கொண்டு நிறுத்திக் கொண்டால் பரவாயில்லை. சோழ மன்னர்கள் அனைவரும் வில்லன்கள்!! நம்பியார் போல் பற்களை நறநற வென்று கடித்துக் கொண்டு சதி திட்டம் தீட்டுவது தான் சோழர்கள் வேலை!! என்று வரலாற்று உண்மை சொல்லிக் கொடுத்தது மதுரை மீட்ட சுந்தரபாண்டியன்!! பாண்டியனை புகழ் சோழர்களை மட்டமாக காட்டுவது, சோழர்களைப் புகழ பாண்டியர்களை மட்டம் தட்டுவது, கிறிஸ்துவ மதத்தை புகழ்வதற்கு இந்து மதத்தை மட்டம் தட்டுவது எல்லாம் திராவிடர்கள் கற்றுக் கொடுத்த விஷயம்!
அந்த பக்கம் எம்ஜிஆர் பாண்டிய மன்னன் என்ற பெயரில் படம் எடுத்தால் இந்த பக்கம் கருணாநிதி சோழ மன்னர்கள் பெயரில் படம் எடுத்து பாண்டியர்களை வில்லனாக காட்டினார்!!
திமுக அதிமுக என்று திராவிடர்கள் சண்டை போட்டுக் கொண்டது போல் தமிழ் மன்னர்கள் ஒருவருக்கொருவர் ஜென்ம பகை கொண்டு சண்டை எல்லாம் போட்டுக்கொள்ள வில்லை.
விட்டால், பாண்டிய மன்னர்கள் அண்டங்காக்காய், சேர மன்னர்கள் மலையாளி, சோழ மன்னர்கள் தீய சக்தி என்று எம்ஜிஆர் கருணாநிதி போல் திரைப்படங்களில் வசனம் எழுதுவார்கள்!
இதில் காமெடி மந்திரிகுமாரி போன்ற படங்களில் நம்பியாருக்கு பிராமண வேஷம் கொடுத்து ராஜகுரு என்பவர் வில்லன் என்று காட்டினார்.
" திருடுவது ஒரு கலை " என்ற ஒரு அற்புதமான வசனத்தை அந்தப் படத்தில் எழுதிய கருணாநிதி பேனாவுக்கு சிறை வைக்கப் போகிறார்கள், திமுக ஆட்சியில்!!
பாண்டிய மன்னன் வரலாறு பற்றி பேசாமல், கோவலன் கண்ணகி மாதிரி பற்றி பேசுவது, பாண்டிய மன்னன் பெயரை கெடுப்பது போல் உள்ளது.
ஸ்டாலின் ஆட்சி பற்றி நான் ஒரு கதை எழுதி அந்தக் கதையில் நான் ஸ்டாலின் பற்றி எழுதாமல், உதயநிதி மற்றும் நயன்தாரா பற்றி எழுதி, நயன்தாராவுக்கு சிலை வைத்தால் திமுக காரர்கள் ஒத்துக் கொள்வார்களா?
திராவிட வரலாற்றையே மாற்றி எழுதுகிறேன் என்று என்னுடன் சண்டைக்கு வர மாட்டார்களா??
அண்ணாதுரை வரலாறு எழுத வேண்டும் என்றால், அண்ணாதுரை பற்றி தான் எழுத வேண்டும். நடிகை பானுமதி பற்றி எழுதக்கூடாது.
கருணாநிதி வரலாறு எழுத வேண்டும் என்றால், விஜயகுமாரி பற்றி எழுத கூடாது.
வருங்காலத்தில் மாணவர்கள், திராவிட ஆட்சியைப் பற்றி தப்பு தப்பா புரிந்து கொள்வார்கள்.
அதுபோல் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் படத்தில், சோழ மன்னர்கள் மரியாதையை குறைத்து தமிழ் மன்னர்கள் ஏதோ அலெக்சாண்டர் போல், நெப்போலியன் போல் வாழ்ந்தார்கள் என்றெல்லாம் படம் எடுக்க கூடாது. விக்ரம் ஐஸ்வர்யா ராய் காதல் படம் எடுப்பதற்கு, வரலாற்று கதைக்களம் தானா கிடைத்தது?
கல்கி ஒரு காங்கிரஸ்காரர். காங்கிரஸ் கட்சிக்கு மதச்சார்பின்மை தீட்டு உண்டு. ஒரு காங்கிரஸ்காரர் எழுதிய கதையை, மணிரத்தினம் என்ற கம்யூனிஸ்ட் காரர் மதச்சார்பின்மை படமாக எடுக்க முனைவது தமிழர் வரலாற்றை தவறாக சித்தரிப்பது போல் ஆகும். யாரோ கொடுக்கும் ( லைக்கா நிறுவனம் ) ஐந்துக்கும் பத்துக்கும் ஆசைப்பட்டு தமிழர் வரலாற்றை அசிங்கப்படுத்தலாமா?
பணத்திற்காக மானத்தை விற்பது போல், மணிரத்தினம் பணத்திற்காக சன் பிக்சர்ஸ், சத்யா மூவிஸ் போன்ற அந்த கால சினிமா நிறுவனங்கள் போல் தமிழர் கலாச்சாரத்தை விற்றுக் கொண்டிருக்கிறார்!!
பாண்டியர்களும் சோழர்களும் பல்லவர்களும் ஆன்மீகம் மற்றும் கோவில்கள் ஒரு விஷயங்களை சேர்ந்து கட்டினார்கள். அவர்கள் சண்டை போட்டுக் கொண்டதை விட, தமிழ் வளர்த்தது ஆன்மீகம் வளர்த்தது சமயம் வளர்த்தது மிகவும் அதிகம்!!
அவர்கள் நீர் மேலாண்மை அரசாங்கம் கோவில் நிர்வாகம் போன்ற விஷயங்களை விட்டுவிட்டு, சண்டை போட்டுக் கொண்டது காதல் செய்தது போன்றவை மட்டும் திரைப்படமாக எடுப்பது வரலாற்றை மிகத் தவறாக காட்டுவது என்று சொல்லலாம்!!
இதில் கமல்ஹாசன் வேறு ஒரு வகையில் காமெடி செய்கிறார். பாண்டியர்களுக்கும் சோழர்களுக்கும் வில்லன் வேஷம் கொடுத்த திராவிட தலைவர்கள் போல், சைவர்களுக்கும் வைணவர்களுக்கும் சண்டை மூட்டி ( சிறிய விஷயத்தை பெரிதாக்கி ) சோழ மன்னர்கள் மோசமான வில்லன்கள் என்று தசாவதாரம் படத்தில் எடுத்து, தன் பங்கிற்கு இந்து மதத்தை கிண்டலடித்துள்ளார்!! என்னமோ வைணவ சமயத்திற்கு தான் தான் வக்கீல் என்று தன்னை நினைத்துக் கொண்டிருக்கிறார்!!
இந்து மதத்தில் பிரிவுகளை ஏற்படுத்தும் ஒரு சூழ்ச்சி இது! கத்தோலிக்கர்களுக்கும் ப்ராட்டஸ்டான்ட் களுக்கும் சண்டை என்று படம் எடுப்பாரா? முஸ்லிம்கள் இரண்டு பிரிவுகளில் சண்டை என்று படம் எடுப்பாரா, மருதநாயகம் என்ற தவறான வரலாற்று படம் எடுத்த கமலஹாசன்?
ஹிந்தியில் இது போன்ற கேவலமான படங்கள் உண்டு.
சமீபத்தில், ஷாம் பெனகல் என்ற காங்கிரஸ் ஜால்ரா டைரக்டர் ஒருவர் ( அந்த காலத்தில் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் நேரு எழுதிய டிஸ்கவரி ஆஃப் இந்தியா என்ற புத்தகத்தை வைத்து பாரத் ஏக் கோஜ் என்ற வரலாற்று தொடர் எடுத்தவர் இவர்), Bose Forgotten Hero என்று நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பற்றி எடுத்த ஒரு திரைப்படத்தை யூட்யூபில் பார்த்தேன்.
எல்லா வரலாற்று குப்பை படங்களுக்கும் இசையமைக்கும் ஏ ஆர் ரகுமான் தான் இந்தப் படத்திற்கும் இசை!!
படத்தில் சுபாஷ் சந்திரபோஸ் அவர்களைப் பற்றி நன்றாக படம் எடுப்பது போல் ஆரம்பித்து, நைசாக அவரை நன்றாக வைத்து செய்து உள்ளார்கள் அந்த படத்தில்!!
ஆப்கானிஸ்தான் தப்பித்துச் செல்லும் சுபாஷ் சந்திரபோஸ் ஒரு கோழை போல் முஸ்லிம் மக்களிடம் தஞ்சம் கேட்பது, ரஷ்யா தூதரகம் வாசலில் கெஞ்சுவது போன்ற காட்சிகளை படத்தில் வைத்திருக்கிறார் டைரக்டர்!!
படத்தின் கடைசியில் பிரிட்டிஷ்கும் சுபாஷ் சந்திர போஸ் இந்திய தேசிய ராணுவத்திற்கும் சண்டை நடக்கிறது. சண்டையில், இந்திய தேசிய ராணுவ வீரர்கள் குடித்துவிட்டு சண்டையிடுவது போல் அதை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் முதலில் எதிர்த்தாலும், பின்னர் எல்லோரும் குடிக்க அனுமதிக்கிறார்!! நேருவுக்கும் காந்திக்கும் சுபாஷ் சந்திர போஸ் கண்டால் பிடிக்காது. ஒரு காங்கிரஸ்காரர், சுபாஷ் சந்திர போஸ் பற்றி படம் எடுத்தால் எப்படி இருக்கும்?
போஸ் திரைப்படம் போல் தான் இருக்கும்!!
சுபாஷ் சந்திர போஸ் பற்றி என்ன காட்ட வேண்டுமோ, அதை விட்டுவிட்டு எதையோ படமாக எடுத்துள்ளார்!!
படத்தின் போஸ்டர் பாருங்கள்! படத்தின் முன்னால் சிலுவை போன்று கத்தி ஒன்றை சோழ மன்னர்கள் அடையாளமாக வைத்திருப்பது மணிரத்தினம் குறும்பு!!
கருணாநிதி பூம்புகார் திரைப்படம் எடுத்தது போல் மணிரத்தினம் என்ற கம்யூனிஸ்ட் எடுக்கும் படத்தில் , ராஜராஜ சோழன் பற்றி எடுக்காமல், ஐஸ்வர்யா ராய் பற்றி தான் எடுப்பார்! கமல்ஹாசன் வைணவ பக்தி பற்றி படம் எடுத்தால், தசாவதாரம் போல் இருக்கும். எம்ஜிஆர் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் எடுத்தது போல் தமிழ் திரைப்படங்கள், தமிழர் வரலாற்றுக்கு சம்பந்தம் இல்லாமல் மிகவும் தவறாக எடுக்கப்படுகிறது என்பது தான் உண்மை!!
No comments:
Post a Comment