Tuesday, May 2, 2023

"மிலிட்டரி சைவம் ஆன சம்பவம்"

 அனசூயையைக் காப்பாற்ற எல்லா தேவைதைகளும் ஓடி வரும்; அகலிகையைக் காப்பாற்ற அயோத்தி ராமனால்தான் முடியும்!

மிலிட்டரிக்காரரைக் காப்பாற்றிய மகாபெரியவா.
தொகுப்பாசிரியர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
-
அந்தணர் ஒருவர், பாரத போர்ப்படையில் சேர்ந்தார். அப்புறம், அந்தண்மை,அன்னண்டை..போய் விட்டது.
சூழ்நிலை அப்படி, சகவாச தோஷம்,மலை, குளிர், காடு, வெய்யில், தனிமை.
பஞ்சமா பாதகங்கள் எல்லாவற்றையும் ,எல்லாவற்றையும்...குறைவறச் செய்தார்.
பணி(னி)யில் இருக்கும்போது, எங்கோ ஒரு முகட்டில் ஒரு மரத்தடியில் நின்று கொண்டிருந்தார். (அது போதிமரம் போலும்!)
'அட!.. வாழ்க்கையைத் தொலைத்து விட்டேனே? எத்தனை வகையான பாதகங்களைச் செய்திருக்கிறேன்? மெய், வாய், மனம்...எல்லாம், கறை! அழுக்கு! பாவம்..,
'எனக்கு உய்வுண்டோ? மகா பாவியாயிற்றே? என்னை யார் காப்பாற்றுவார்கள்? கருணை வள்ளல் பரமேசுவரனால் கூட முடியாதே'
Chalo! Kailash to Kanchi via Kaladi
நேரே காஞ்சிபுரம் வந்தார்.'மெஷின்கன்'களை இயக்கிய கரங்களால், வாய்பொத்தி நின்றார்.கண்ணீர் வெள்ளத்துக்கு அணை கட்ட முடியவில்லை.
கச்சிமுதூர் வள்ளல், கருணை சமுத்திரம்.
புண்ணியம் செய்தவர்களை தெய்வங்கள் பார்த்துக் கொள்ளும். மகாபாவிகளை மீட்டுக் கொணர்வதற்குக் காஞ்சிப் பகலவனால் தான் முடியும்.
அனசூயையைக் காப்பாற்ற எல்லா தேவதைகளும் ஓடிவரும். அகலிகையைக் காப்பாற்ற அயோத்தி ராமனால்தான் முடியும்!
பெரியவா சொல்கிறார்;
"பிரஸித்தமான ஒரு சிவக்ஷேத்ரத்துக்குப் போ. புண்ணிய தீர்த்தத்தில் ஸ்நானம் பண்ணு.உபவாசம் இரு. நந்திகேஸ்வரிடம் போய், வாய்விட்டு...இப்போ என்கிட்ட சொன்னியே, அது மாதிரி...சொல்லி, வேண்டிக்கோ. உன்னை மன்னிக்கும்படி பரமேசுவரனிடம் சிபாரிசு செய்யும்படி பிரார்த்தனை செய்.
"உன்னால் தப்புப் பண்ணாமல் இருக்க முடியாது. க்ஷத்ரிய தர்மத்தை அவலம்பிச்சிருக்கே. ரொம்ப குறைச்சுக்கோ.."
அந்த மிலிட்டரிக்காரர், சிவத்தை நாடிப் போனார்.
'அபயம் ஸர்வபூதேப்யோ ததாம்யேதத்விரதம் மம' வால்மீகியின் இராமன், காஞ்சியிலும் காட்சி கொடுப்பான்.
May be an image of 1 person and text
All reactions

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...