Wednesday, May 3, 2023

ஏதோ அந்த மாமனிதரின் காலத்திலாவது வாழ்ந்திருக்கிறோமே.நாம் கொடுத்து வைத்தவர்களே.

 தமிழை அதன் அழகுணர்ச்சி வெளிப்பட உச்சரிப்பதில் தனித்திறமை பெற்ற நடிகை எம்.என். ராஜம் அவர்களுக்கு இன்னொரு பெருமையும் உண்டு. ஆண்கள் உறுப்பினர்களாக இருந்து வந்த தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முதல் பெண் உறுப்பினர் என்ற பெருமையைப் பெற்றவர் எம்.என். ராஜம் அவர்கள். இதற்காக, பத்து ஆண்டுகளுக்கு முன் நடிகர் சங்க நிர்வாகிகளால் அவர் கெளரவிக்கப்பட்டார். வசனத்தின் ஒவ்வொரு வார்த்தையின் கடைசி எழுத்தையும் தேயாமல் தெளிவாக உச்சரிப்பவர். நாடோடி மன்னன் படத்தில் நாடோடியான மக்கள் திலகத்தை சூழ்நிலையால், தனது கணவர் மன்னன் மார்த்தாண்டன் என்று தவறாகப் புரிந்துகொண்டு பிறகு உண்மையை உணர்ந்து வருந்தும் காட்சியில் வசனமே இல்லாமல் கூட மிகச் சிறப்பாக நடித்திருப்பார்.

மக்கள் திலகம் தமிழக முதல்வராக இருந்த நேரம். ஒரு நிகழ்ச்சியில் அவரை எம்.என். ராஜம் பார்த்திருக்கிறார். கூட்ட நெரிசலில் அவரை நெருங்க முடியவில்லை. ‘அண்ணா..’ என்று சத்தமாக அழைத்திருக்கிறார். திரும்பிப் பார்த்த மக்கள் திலகம், இவரை கூப்பிட்டு நலம் விசாரித்து ‘இப்ப என்னம்மா பண்ணிட்டிருக்க?’ என்று கேட்டிருக்கிறார். அப்போது, ராஜம் அவர்கள் அதிகமாக படங்களில் நடிக்காத காலம். ‘சும்மாதாண்ணே இருக்கேன்’ என்று தெரிவித்துள்ளார். ‘நீ சும்மா இருக்கலாம். ஆனா, உன் தமிழ் சும்மா இருக்கக் கூடாது’ என்று மக்கள் திலகம் கூறியிருக்கிறார்.
முன்பெல்லாம் திரையரங்குகளில் படம் தொடங்குவதற்கு முன்னால் தமிழக அரசின் செய்தித்துறை சார்பில் அரசு நிகழ்ச்சிகள், விழாக்கள், முக்கிய நிகழ்வுகளைக் காட்டுவார்கள். அந்தக் காட்சிகள் பற்றிய விவரங்களைக் கூறும் பின்னணிக் குரல் கொடுக்கும் பணிக்கு எம்.என். ராஜம் அவர்களை மக்கள் திலகம் நியமித்தார். இதில் கொடுமை என்னவென்றால் மக்கள் திலகம் மறைந்தபோது அதுபற்றிய செய்திச் சுருளுக்கும் எம்.என்.ராஜம் குரல் கொடுத்தார்.
எல்லாத் தொழிலிலும் கஷ்டங்கள் உண்டு. என்றாலும் நடிகர், நடிகைகள் என்றால் உணர்வு ரீதியான கூடுதல் கஷ்டம். மற்ற வேலைகளில் பணியைச் செய்து கொண்டே சிரிக்கலாம். மன வேதனையால் அழுதாலும் கண்களைத் துடைத்துக் கொண்டு சோகமான முகத்துடன் வேலை பார்க்கலாம். ஆனால், நடிகர், நடிகைகளின் பாடு சிரமம். வீட்டில் சந்தோஷமான நிகழ்வுகளால் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அன்றைக்கு என படத்தில் யாராவது உறவினர் இறக்கும் காட்சி படமாக்கப்படும். அதாவது பரவாயில்லை. எப்போதோ இறந்த தனது அன்புக்குரியவர்கள் தன்னோடு பழகிய நாட்களை நினைத்தால் இப்போதும் கண்களில் நீர்முட்டும். சமாளிக்கலாம்.
வீட்டில் துக்க நிகழ்வு நடந்திருக்கும். அந்தச் சூழலில் கல்யாணக் காட்சி படமாக்கப்படும். டூயட் காட்சி எடுப்பார்கள். இவர்கள் முகம் மலர சிரிக்க வேண்டும், ஆட வேண்டும். எவ்வளவு கொடுமை? ஒரு பேட்டியில் எம்.என்.ராஜம் அவர்கள் குறிப்பிட்டார். மக்கள் திலகம் மறைந்த செய்தியை படிக்கும்போது அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டு படித்தேன் என்று தெரிவித்தார். அவர் கொடுத்த பணியில் அவரே இறந்த செய்தியை படிப்பது என்பது எவ்வளவு மன வேதனையைத் தரும்?
இங்கே பதிவிட்டுள்ள படத்தில் நாடோடி மன்னன் படத்துக்காக எம்.என்.ராஜம் அவர்களுக்கு காட்சியமைப்பை விளக்குகிறார் மக்கள் திலகம்!
May be an image of 2 people
All reactions:

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...