" உண்டதே உண்டு, உடுத்ததே உடுத்து, அடுத்தடுத்து உரைத்ததே உரைத்து, கண்டதே கண்டு கழிந்தன கடந்த நாட்கள் "..,
உரைத்தவர் நம் கதை ஆசான்
திரு " சுஜாதா ".,
என் போன்றவர்கள் பிறந்த நாள் கொண்டாடுவதில் ஏதும் பிரயோஜனம் இல்லை. எனவே, பிறந்த நாள் ஞாபகம் இருந்தால் கோயிலுக்கு போவேன்..,
பெருமாள் பெயரில் ஓர் அர்ச்சனை பண்ணுவாள் என் மனைவி. அவ்வளவுதான். இந்த அளவுக்கு மேல் எந்த ஊரிலும் எந்த வயதிலும் கொண்டாடியதில்லை..,
காரணம், ஒரு வருஷம் சாகாமல் தொடர்ந்து வாழ்ந்தது,இந்த நவீன மருத்துவ யுகத்தில் அவ்வளவு பெரிய சாதனையாக எனக்குப் படவில்லை. வியாதிகளை மனசுக்குள் வைத்திராமல் வெளிப்படையாக சொல்லிவிட்டால் பரிகாரங்கள் அலோபதியில் ஏராளமாக உள்ளன..,
ஆதிமனிதனாக இருந்தாலோ, காட்டு மிருகங்கள் தின்னாமல் அண்டை மனிதருடன் சண்டையில் மண்டை உடையாமல் ஒரு வருஷம் உயிர் வாழ்ந்ததைப் பெரிய சாதனையாகச் சொல்லலாம். நாம் என்ன செய்தோம்..? ஆபிஸ் போனோம், சினிமா பார்த்தோம், எழுனோம், படித்தோம், முதுகு சொரிந்து கொண்டோம், பேசினோம், பழகினோம், பிளாடபாரம் ஓரமாக ஜாக்கிரதையாக நடந்தோம். அவ்வளவு தானே... இது என்ன பெரிய சாதனை. இதை என்னவோ, உலகை அசைக்கும் தினமாக கொண்டாடுவது அபத்தமாகப் படுகிறது. பிறந்த நாள் என்பது மற்றொரு நாள் "..,
இப்படியெல்லாம் சொன்ன நம்
கதையுலக ஆசானுக்கு இன்று பிறந்த நாள்!.,
அவர் கொண்டாட வில்லையென்றால் என்ன!? நாம் கொண்டாடுவோம் !.,
No comments:
Post a Comment