*ரூபாய் 15 லட்சம் மதிப்புள்ள சொகுசு காரில் வந்து நெல்லை டவுன் கல்லணை பள்ளி காப்பகத்தில் தங்கியிருக்கும் ஆதரவற்றவர்களுக்கு முடி திருத்தும் பணியில் ஈடுபட்டு வரும் நெல்லை தொழிலதிபர்*
நெல்லை பாளையங்கோட்டை சாந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர் சீவலப்பேரி சாலையில் டைல்ஸ் குடோன் நடத்திவருகிறார். சமூக சேவையில் ஆர்வம் கொண்ட செல்வராஜ் தினமும் நெல்லை டவுன் கல்லணை பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள ஆதரவற்றோர் காப்பகத்திற்கு தனது சொகுசு காரில் டிப்டாப்பாக வருகிறார்.
பின்னர் சிறிது நேரத்தில் அவர் சலூன் கடைக்காரர்களுக்கு போட்டியாக செயல்படும் வகையில் தனது ஆடையை மாற்றிக் கொண்டு தான் கொண்டுவந்திருக்கும் கருவிகளுடன் களத்தில் இறங்கி விடுகிறார் தொடர்ந்து முகாமில் தங்கி இருக்கும் சாலையோரத்தில் சுற்றித்திரிந்த நபர்களுக்கு முடி திருத்தும் பணியில் ஈடுபடுகிறார். தினமும் 10 பேருக்கு முடி திருத்தும் பணி செய்கிறார்.
இதுகுறித்து செல்வராஜ் கூறுகையில் கடந்த 3 வருடங்களாக இது போன்ற பணிகளில் நான் ஈடுபட்டு வருகிறேன். எனது தொழில் விஷயமாக தொலைதூரம் காரில் செல்லும் பொழுது சாலையோரத்தில் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் இருந்தால் அவர்கள் அருகில் சென்று அவர்களுக்கு முடி திருத்தும் பணியில் ஈடுபட்டு புத்தாடை அணிவித்து விட்டு செல்வேன் என மிகுந்த சந்தோஷத்துடன் கூறுகிறார்.
தொழிலதிபர் ஆதரவற்றவர்களுக்கு முடி திருத்தும் பணியில் ஈடுபடுவது மனித நேயத்திற்கு மகுடம் சூட்டுவது போல் அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது.
No comments:
Post a Comment