*அனாபஸார காலம்!*
*பூரி ஜெகந்நாதர் ரதயாத்திரை!* - 20/6
பூரியில் மிக முக்கியமான காலம் இந்த *அனாபஸார/அனாவஸார காலம் எனப்படும் 14 நாட்கள் ஓய்வு!*
ஜ்யேஷ்ட (ஆனி) பௌர்ணமி அன்று *ஸ்ரீஜகந்நாதர், ஸ்ரீபலராமர், சுபத்ரா* மூவரும் 108 குடங்கள் தீர்த்தத்தில் திருமஞ்சனம் கண்டருள்வார்கள்.
அதாவது, வருடத்தில் ஒரு முறை கோவில் கர்பக்ருஹத்தில் உள்ள மூலவ விக்ரஹங்கள் வெளியில் வந்து ஸ்நான வேதியில் குளித்தலே *ஸ்னான யாத்திரை* எனப்படுகிறது.
நிறைய நேரம் தண்ணீரில் விளையாடிக் குளித்ததில், மூவருக்கும் ஜலதோஷம், ஜுரம் போன்றவை வந்துவிடுகின்றன.
அதனால் ஜுரமருந்து, ஜலதோஷ மருந்து எல்லாம் கொடுத்து, விசேஷ கஷாயம் கொடுத்து, பலராமர், சுபத்ரா, ஜகந்நாதரை தனி தனியாக ஒரு இடத்தில் ஓய்வாக இருக்கவைப்பர்!
அந்த சமயத்தில் பழச்சாறு, மருந்து, கஷாயம் மட்டுமே அவர்களுக்கு நிவேதனம் செய்யப்படும்!
இந்த இரண்டு வாரம் பகவானை யாரும் தரிசிக்க இயலாது!
இந்த சமயத்தில் உலகெங்கிலும் உள்ள ஜகந்நாத பக்தர்கள், தங்கள் வீடுகள், அலுவலகங்கள், கடைகளில் உள்ள ஜகந்நாதரின் மூர்த்திகள், ஜகந்நாதர் படங்கள் ஆகியவற்றை வெள்ளை துணியிட்டு மூடி வைப்பார்கள்!
14 நாட்கள் கழித்து கோயில் திறக்கப்படும். அப்போது ஜகந்நாதர், பலராமர், சுபத்ரா புதுப்பொலிவுடன் காட்சி தருவார்கள்! *அதற்கு நபயௌவன (புதிய இளமை) தரிசனம்* என்று ஊரே வந்து தரிசித்துக் கொண்டாடும்!
அதற்கு அடுத்த நாள் பலராமர், சுபத்ரா, ஜகந்நாதர் மூவரும், கோயிலைவிட்டு வெளியில் வந்து பக்தர்களுக்காக ரதயாத்திரை கண்டருள்வார்கள். அதுதான் உலகில் பிரசித்தி பெற்ற *பூரி ஜெகந்நாத ரத யாத்திரை!*
No comments:
Post a Comment