பீஹாரில்திமுக உட்பட சில எதிர்க் கட்சிகள் ஒன்றாகக் கூடி கலந்தாய்வுக்கு கூட்டம் நடத்துகின்றன.எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் நின்றால்தான் மோடியை தோற்கடிக்க முடியும் என்றுநினைக்கிறார்கள்; ஆனால், இது நடக்கப்போவதில்லை;
1)TMC க்கு மே.வங்கத்தில் மட்டுமே செல்வாக்குஇருக்கிறது; பிற மாநிலங்களில் இந்தக்கட்சிக்கு சல்லி வேர் கூட கிடையாது; மே .வங்கத்திலேயேகூட கம்யூனிஸ்ட்கள் TMC யை ஆதரிக்கமாட்டார்கள்; 2)கும்மிடிப்பூண்டிதாண்டினால் ஸ்டாலினை யார் என்றே மக்களுக்குத் தெரியாது; 3) பிஹாரைதாண்டினால் RJD க்கும் நிதிஷ்குமாருக்கும் செல்வாக்கு கிடையாது.4) கம்யூனிஸ்ட்களோகேரளா தவிர்த்த பிற மாநிலங்களில் நோட்டாவுடன் மட்டுமே போட்டியிட முடியும். கேரளாவிலும்கம்யூனிஸ்ட்களை காங்கிரஸ் ஆதரிக்காது; 5)அகிலேஷ்யாதவ் உ.பி.யில் மட்டுமே ஓரளவு செல்வாக்கு உள்ளவர்;
6)NCP ம் ,சிவசேனாவும் மகாராஷ்டிராவை தாண்டி எதுவும் செய்ய முடியாது;
இப்படிஒரு மாநிலத்தில் மட்டுமே ஆதரவு தளம் வைத்துக் கொண்டிருக்கும் இக்கட்சிகள் கூட்டணியாகசேர்ந்தாலும் யாருக்கு என்ன பயன் இருக்க முடியும்...?
காங்கிரசைபொறுத்தவரை கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்றுவிட்டதால் , அந்த இமேஜைப்பயன்படுத்தி 2024 மக்களவை தேர்தலில் அதிக இடங்களை பெற்றுவிடலாம் என நினைக்கிறது.; அதுவெறும் கனவே. 2019மக்களவை தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன் நடந்த கர்நாடக, ம.பி , ராஜஸ்தான் , சத்திஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ்தான் வெற்றி பெற்றது;ஆனால் 2019 மக்களவை தேர்தலில் பாஜக 303 இடங்களில் வெற்றி பெற்று சாதனை படைத்தது.
மோடி இந்தியாவின் சிறந்த பிரதமராக இல்லை; உலகின் சிறந்த பிரதமராக விளங்குகிறார். கடந்த 9 ஆண்டுகளில் ஊழலே இல்லாத மிகச் சிறந்த ஆட்சியைக் கொடுத்திருக்கிறார் மோடி; மோடி மட்டுமல்ல.அவரது அனைத்து அமைச்சர்களும் கறைபடியாக் கரங்களுக்கு சொந்தக்காரர்கள் ; 2005-2014காங்கிரஸ் திமுக கூட்டணி ஆட்சி பற்றி நினைவிருக்கிறதா ..இந்த பத்தாண்டுகளில் ஊழல் மற்றும் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத தாக்குதல்கள் இவற்றை தவிர வேறு எதுவுமே நடக்கவில்லை.
கடந்த 2 ஆண்டு திமுக ஆட்சியைப் பார்க்கிறோம். செந்தில் பாலாஜி விவகாரம் உட்பட கீழ் மட்டத்திலிருந்துமேல்மட்டம் வரை எங்கு பார்த்தாலும் ஊழல் என்பதே பேச்சாக இருக்கிறது. திமுக அமைச்சர்ஒருவரே ஆளும் கட்சியின் முக்கிய புள்ளிகள் இருவர் ஒரே வருடத்தில் 30000கோடிகள் முறைகேடாக சம்பாதித்திருக்கிறார்கள் என்று குற்றம்சாட்டுகிறார். அந்த அளவுக்கு தமிழகத்தில் ஊழல்அங்கிங்கெனாதபடி எங்கும் வியாபித்திருக்கிறது.; மக்களாகிய நமது பணம் சூறையாடப்படுகிறது.
இந்தநிலையில் எப்படியாவதுஅனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து , எப்படியாவது 2024 மக்களவை தேர்தலில் கூட்டணிவெற்றி பெற்று , எப்படியாவது அமைச்சரவையில் முக்கிய பதவியை பெற்றுவிட்டால், எப்படியாவது ஊழல் மோசடி வழக்குகள் நம்மை நெருங்காது பாதுகாத்துக் கொள்ளலாம் என்பதற்காகத்தான் உருண்டுபுரண்டு டில்லிக்கும் பிஹாருக்கும் ஓடிக் கொண்டிருக்கிறார்கள்; ஊழல்வாதிகள்அனைவரும் ஒன்று சேர்ந்து மோடியை தோற்கடிக்க நினைக்கிறார்கள்.
மோடிநாட்டில் மத ஜாதி வேறுபாடின்றி அனைத்து மக்களுக்கும்அனைத்தும் செய்து கொடுத்திருக்கிறார்; மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த இதுவரை காணாத பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை கொண்டுவந்திருக்கிறார் ; இந்த 9 ஆண்டுகளில் காணும் முன்னேற்றம் வளர்ச்சி இதுவரை நாடு காணாதது.
உலகின்சுண்டெலியாக இருந்த இந்தியா இன்று சிங்கமாக உயர்ந்து நிற்கிறது; கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு சிந்தித்தால் மோடியைப் போன்ற ஒரு தலைவர் யாரும் இல்லை என்பதை அனைவருமேஒப்புக் கொள்வார்கள்;
எனவே,கூட்டணிகளைத் தாண்டி மக்கள் ஆதரவு என்ற பிரம்மாண்ட சக்தியின் துணையுடன் மோடி மீண்டும் வெல்வார்.
No comments:
Post a Comment