வடநாட்டிலிருந்து தமிழ்நாட்டுக்கு வரும் பலருக்கு, ஹோட்டலில் காபி குடிப்பது எப்படி என்பது தெரியவில்லை.
டபரா டம்ளர் முறை தமிழ்நாட்டிலும் கர்நாடகாவிலும் மட்டுமே இருக்கிறது.
ஆனால் நம்மூரில் அப்படியல்ல.
காபி கொஞ்சம் சூடு குறைவு என்றால் கூட நாம் சவுண்டு விட ஆரம்பித்து விடுவோம். காபி என்றால் சூடாகத்தான் கொடுக்கப்பட வேண்டும். இதுதான் தமிழ்நாட்டில் எழுதப்படாத விதி. எனவே இதை முதலில் புரிந்து கொள்வோம்.
2. டம்பளரின் விளிம்புகளைப் பிடித்துத் தூக்கி, காபியைச் சிந்தாமல் சிதறாமல் டபராவில் ஊற்ற மன வலிமை முதலில் தேவை. அதற்கேற்ற மனப்பக்குவம் தேவை. சூட்டைப் பொறுத்துக் கொள்ளும் பொறுமை தேவை.
இதெல்லாம் உங்களுக்கு இல்லை என்றால் ஹோட்டல் சிப்பந்தியிடமே உதவி கேளுங்கள். அவரே ஊற்றிக் கொடுப்பார்.
3. எப்படியோ தைரியம் வரவழைத்துக் கொண்டு பொறுமையைக் கடைபிடித்து, லாவகமாக, காபியை டம்ளரிலிருந்து டபராவில் ஊற்ற வேண்டும். கடைசி சொட்டு வரை ஊற்ற வேண்டும். ஏன்?
அப்போதுதான் டம்ளரின் கீழ்பாகத்தில் இருக்கும் சர்க்கரை கண்ணுக்குத் தெரியும்.
3. சர்க்கரை தரிசனம் கிடைத்தவுடன், அந்தச் சர்க்கரை கரையும் அளவுக்கு,
மீண்டும் டபராவிலிருந்து காபியை டம்ளரில் ஊற்ற வேண்டும்.
4. உடனேயே நேரம் தாழ்த்தாமல், அங்கும் இங்கும் பராக்கு பார்த்துக் கொண்டு இருக்காமல், டம்ளரைக் கையில் தூக்கி இரண்டு சுழற்று சுழற்றி, சர்க்கரை கரைந்ததா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
உடனேயே மீண்டும் டபராவில் இருக்கும் மீதி காபியை டம்ளரில் ஊற்ற வேண்டும். அங்கும் இங்கும் பராக்கு பார்த்துக் கொண்டு இருந்தால் டபராவில் உள்ள காப்பி ஆறிவிடும், சுவை குறைந்து விடும் என்பதை நினைவில் கொள்க.
5. இப்பொழுது டம்ளர் முழுவதும் காபி, முன்பு இருந்தது போல. ஒரே வித்தியாசம் என்னவென்றால் ஹோட்டல் சிப்பந்தி கொண்டு வந்த காபியில் சர்க்கரை கரைந்திருக்காது. சூடு அதிகம் இருக்கும்.
ஆனால் இப்பொழுது சர்க்கரையும் கரைந்து விட்டது. குடிப்பதற்குப் பாங்கான சூடும் இருக்கிறது. சுமார் 70⁰C.
6. இப்போது டம்ளரில் இருக்கும் காபியைக் கொஞ்சம் கொஞ்சமாக டபராவில் விட்டு, அமைதியாக, அங்கும் இங்கும் பராக்கு பார்த்துக் கொண்டு, டபராவை உதட்டருகில் கொண்டு வந்து, காபியை ரசித்து சுவைத்துப் பருக வேண்டும்.
டம்ளரில் இருக்கும் காபி அவ்வளவு சீக்கிரம் சூடு குறையாது. டபராவில் இருக்கும் காபி சீக்கிரம் சூடு ஆறிவிடும் என்பதையும் நினைவில் கொள்க.
இவ்வளவுதான் மேட்டர்! தமிழன் இதில் புலி!
No comments:
Post a Comment