இடம்: திருத்தணி பேருந்து நிலையம் அறுகில்..
நண்பர்களின் வற்புறுத்தலின் பேரால் இந்த உணவு விடுதிக்கு சென்றேன் இன்று மதியம்.. சென்ற பிறகு தான் தெரிந்தது அது விடுதி அல்ல கோவில் என்று.. நட்சத்திர (star hotel) விடுதியில் கூட சென்று அருந்தி உள்ளேன்.. ஆனால் வெறும் 20rs மட்டுமே உணவுக்காக வாங்கி கொண்டு,வந்தவர்களை உபசரிக்கும் விதம் உண்மையில் ஆச்சர்யதில் ஆழ்த்தியது என்னை.. அளவு சாப்பாடு இல்லை.. வயிறாற சாப்பிட்டாலம் என்னும் வாசகம் அங்கே சென்ற என்னை மிகவும் கவர்ந்தது..
ஓரு தட்டு உணவு 200rs என்னும் அளவுக்கு சாப்பிட்டு சாப்பிட்டு நம் மனதில் இது போன்ற சாதாரண உணவு விடுதிகளை கண்டால் கேவலமாக நினைத்து விடுகிறோம்..
உணவு போடுவதை விட உணவு பரிமாறும் நபர்களின் மன நிலையை பொறுத்தே உணவின் ருசியும்,ஆரோக்கியமும் அடங்கி உள்ளது என்பதை கருத்தில் கொண்டு இது போன்ற விடுதிகளை ஒதுக்காமல் ,வெட்கப்படாமல் சென்று உண்ணுங்கள்..
நான் உணவு உண்டு விட்டு செல்லும் முன்பு ,அங்கிருந்த ஒவ்வொருவரையும் வாழ்த்தாமல் வர முடியவில்லை..
இதை ஏன் பகிர்கிறேன் என்றால் நல்லது ,மற்றும் நல்லதை செய்வோறை பகிர வேண்டும் என்ற எண்ணத்தில் தான்..
No comments:
Post a Comment