நெற்றியில் விபூதியும், வாயிலே முருகனது நாமத்தையும் துணையென எண்ணி இருந்தவர் கண்ணதாசன்.
கடவுளைப்பற்றி சந்தேகம் வருபவர்களுக்கு" தெய்வம் என்றால் அது தெய்வம்வெறும் சிலை என்றால் அது சிலைதான்உண்டென்றால் அது உண்டு இல்லை என்றால் அது இல்லை"
என்று சொல்லும் விளக்கத்தைவிட வேறு எப்படிச் சொல்லமுடியும். இதுதான் கண்ணதாசன்.
பூஜ்ஜியத்துக் குள்ளே ஒரு ராஜ்ஜியத்தைஆண்டு கொண்டு புரியாமலே இருப்பான் ஒருவன்அவனைப் புரிந்து கொண்டால் அவன்தான் இறைவன் "
பாமரரும் புரியும்படி கடவுள் தத்துவத்தைக் காட்டுவது அவரின் தனித்துவம்தானே.
" தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம் அது தெரியாமல் போனாலே வேதாந்தம் மண்ணைத்தோண்டி கண்ணீர் தேடும் அன்புத்தங்கச்சிஎன்னைத் தோண்டி ஞானம் கண்டேன் இதுதான் என்கட்சி
உண்மை என்ன பொய்மை என்ன இதில் தேன் என்ன கடிக்கும் தேள் என்ன ஞானப் பெண்ணே
தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு இந்த ஊரென்னசொந்த வீடென்ன ஞானப் பெண்ணேவாழ்வின் பொருளென்னநீ வந்த கதை என்ன "
அவரின் பாடல்கள் அழியாப் புகழ் பெற்றன என்பதில் எள்ளளவும் எந்தவித ஐயமும் இல்லை.காலத்தை வென்றவன் கண்ணதாசன் வாழ்கின்றார்.
No comments:
Post a Comment