Wednesday, June 21, 2023

நேரத்துக்குள் டெலிவரி கொடுத்தாக வேண்டிய நிர்ப்பந்தத்தில் சாலை விதிகளை மீறி விபத்தில் சிக்கி கொள்கின்றனர்.

 மொபெட்டில் வழக்கமான 20 k.M ஸ்பீடில் சென்று கொண்டிருந்தேன் .

மீடியனில் விட்ட இடைவெளியிலிருந்து ஒரு உணவு சப்ளை செய்யும் இளைஞர் எதிர் திசையில் பயணப்பட சட்டென நான் பிரேக் பிடித்து தரையில் கால் ஊன்றியதால் ஒரு மோதல் தவிர்க்கப் பட்டது. ஆயினும் அந்த இளைஞர் வண்டியோடு கீழே விழுந்தார்
என் வண்டிய ஓரம் கட்டி, அந்த இளைஞர் எழ உதவி செய்து சாலை ஓரம் அழைத்து சென்று என்னிடம் இருந்த தண்ணீர் கொடுத்தேன்.
இன்னொரு நண்பர் விழுந்த பைக்கை உருட்டி ஓரமாக கொண்டுவந்து நிறுத்தினார்.
தம்பி, முழங்கையில் சிராய்ப்பு உள்ளது தண்ணீர் ஊற்றி கழுவுங்கள் என்றேன்.
அந்த தம்பி அதைக் கவனிக்காமல் வண்டியை ஸ்டார்ட் செய்து பார்த்தார் . வண்டியை சுற்றி வந்து ஏதும் டேமேஜ் உள்ளதா என பார்த்தார்,
தம்பி சிராய்ப்பை பற்றி கவலைப படாமல் வண்டியை பார்க்கிறாயே என்றேன்.
சார் எங்கள் தொழிலுக்கு வண்டிதான் முக்கியம் . சொந்த வண்டி இருந்தால்தான் டெலிவரி வேலையே தருவார்கள். லோன் போட்டு வாங்கிய வண்டி . ஏதோ கடவுள் புண்ணியத்தால் வண்டிக்கு ஒன்றுமில்லை. சின்ன காயம் ஆறிவிடும்சார், ஆனால் வண்டிக்கு ஏதாவது ஆனால் செலவு பண்ணும் நிலையில் நான் இல்லை என்றான்.
ஏன் தம்பி இவ்வளவு வேகமாய் வந்தீர்கள் என கேட்டேன்.
சார். எங்களுக்கு சம்பளம் குறைவு சார். ஆர்டர் கிடைத்துவுடன் எவ்வளவு சீக்கிரமாக டெலிவரி செய்கிறோமோ அதற்கு தகுந்தால் போல் இன்சென்டிவ் கிடைக்கும் சார் அதான் இந்த வேகம் என்றான்.
என்ன படித்திருக்கிறிர்கள் எனக் கேட்டேன் .
பி.இ சார். படிப்புக்கு தகுந்த வேலை கிடைக்கவில்லை . முயற்சி செய்கிறேன் .அதுவரை இந்த டெலிவரி வேலை என்றான் , விவேகானந்தர் கேட்ட அந்த 100 இளைஞரில் ஒருவன்.
அருகில் இருந்த பெட்டிக் கடையில் தொங்கிய வால் போஸ்ட்டை பார்த்தேன் .
அமலாக்கத்துறை வருகை , ஹார்ட் அட்டாக் செய்திகளை பெரிதா போட்டு நம்மை திசை திருப்பி விட்டு, இரண்டு செய்திகள் சிறிதாக இருந்தன.
சாலை வரி அதிகரிப்பு,இதனால் இரு சக்கர வாகன விலை 8000 அதிகரிக்கும்
இன்னொன்று நகரில் 40 கி.மீ வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும் இல்லை அபராதம்
இரண்டுமே இந்த மாதிரி மிடில் கிளாஸ் இளம் டெலிவரி பையைன்களை பொருளாதார ரீதியாக பாதிப்பது.1552
வீடு வரி உயர்வு, பால் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு, மின் கட்டண உயர்வு என்ற வரிசையில் மேலும் இந்த இரண்டு
என்ன செய்ய, எவ்வளவு அடித்தாலும் தாங்குகிறான் , ரொம்ப நல்லவன் இந்த மிடில் கிளாஸ்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...