இரண்டு அடுக்குகள் கொண்ட பேருந்துகளை மாலத்தீவில் பெண்கள் ஓட்டுநராக இயக்குகிறார்கள்.8மணி நேர வேலை.
இந்த வேலையை இங்குள்ளவர்கள் இணையத்தில் பதிவு செய்து விளம்பரம் செய்வதில்லை.
ஆனால் தமிழ்நாட்டில் இரண்டு பெண் பிள்ளைகள் பேருந்தில் ஓட்டுநராக இருப்பதை இமயமலை அளவுக்கு விளம்பரம் செய்கிறார்கள்.பெண்கள் இப்போது இராணுவ விமானத்தையே விமானியாக இயக்கும் போது சாதாரண பேருந்தை ஓட்டுவது சாதனை அளவுக்கு விளம்பரம்.
இப்போது வாகனத்தை இடது வலது பக்கம் திருப்ப உதவிடும் கைப்பிடியில் உள்ள சக்கரத்தை ஒரு விரலால் இப்போது திருப்பலாம்.
முன்பெல்லாம் ஒரு இக்கட்டான இடத்தில் திருப்ப ஓட்டுனர்கள் படும் கஷ்ட்டம் தாய் கொடுத்த பால் வியர்வை வடிவில் வெளியேறும்.
இப்போதெல்லாம் வேலைக்கு போகும் பெண்கள் சுயமாக தானே மகிழுந்தை ஓட்டிச்செல்கிறார்கள்.
இந்த இரண்டு பெண்களுக்கு முன்பே நாகர்கோவிலைச்சேர்ந்த ஒரு பெண்மணி ஓட்டுநராக பணி செய்து ஓய்வு பெற்றுள்ளார்.
நாமக்கல் பகுதியை சேர்ந்த பெண்மணி தன் கணவருடன் இணைந்து லாரி ஓட்டுனராகவும்,மூட்டை தூக்கும் தொழிலாளியாகவும் இருந்து வருகிறார்.
இதில் சினிமா நடிகர் நடிகைகளையே மிஞ்சுமளவுக்கு கோவைப்பகுதி பெண் தன்னை தானே விளம்பரபடுத்தி கொள்கிறார்.
ஓட்டுனர் என்பது தொழில் அந்த தொழிலின் புனிதம் கெடாமல் செய்யபவனே உண்மை தொழிலாளி.
No comments:
Post a Comment