#எம்ஜிஆர் எப்படி பெரும் பிம்பமாக சினிமா எனும் மாயகண்ணாடியால் உருவானார் என்பதை மிக அருகிலிருந்தே பார்த்த கருணாநிதிக்கு தன்னுடைய மகனையும் அப்படி உருவாக்கிவிடலாம் என நம்பிக்கை வந்ததில் ஆச்சரியமில்லை.
#ஒரு நடிகன் இப்படித்தான் உருவாகிறானா? இதிலென்ன பிரமாதம் என்பது அருகிலிருப்பவர்களுக்கு புரியும். கருணாநிதிக்கும் அது புரிந்தது. அப்படித்தான் தன் மகன் மு.க. முத்துவை எம்ஜிஆருக்கு எதிராக உருவாக்கினார் கருணாநிதி.
#கருணாநிதிக்கும் எம்ஜிஆருக்கும் பனிப்போர் தொடங்கிய காலத்தில் திரைப்பட நடிகராக அறிமுகமானார் மு.க முத்து, எம்ஜிஆருக்கு ரசிகர் மன்றம் உள்ளதைப் போலவே ஆங்காங்கு முக முத்துவிற்கும் ரசிகர் மன்றங்கள் திறக்கபட்டன அல்லது அன்றைய திமுகவினரை வைத்து திறக்க வைக்கப்பட்டது.
#ஆனால் எம்ஜிஆர் முன் மு.க.முத்துவால் நிற்கமுடியவில்லை.
#எம்ஜிஆருக்கு எதிராக கருணாநிதி எடுத்த இந்த ஆயுதம் முனை முறிந்து போனது.
No comments:
Post a Comment