வே.....கமா ஓடி கிட்ட வரவும் அந்த டவுன் பஸ் அதானி சொல்லி ( எப்ப பார்த்தாலும் டாட்ட சொல்லி – ஒரு மாறுதல் ) கிளம்பி விட்டது.
.
ஸ்டாப் அருகில் இருந்த பெட்டிக் கடையில் ஒரிஜினல் பிஸ்லேரியின் ஸ்பெல்லிங் மாற்றி போட்டிருக்கும் டுப்ளிகேட் பாட்டல் தண்ணீர் வாங்கி குடித்து ஆசுவாச படுத்திக் கொண்டேன் .
அடுத்த பஸ் வர இன்னும் அரை மணி நேரம் ஆகும் என்றார் கடைக்காரர். ஆசுவாச படுத்தி சுற்றும் முற்றும் பார்த்தேன்.
7,8, டிராபிக் போலிஸ்கள்,, ஹெல்மெட் போடாமல் ஜனங்கள் ஒட்டி வரும் இரு சக்கர வாகனங்களை பிடித்து கொண்டிருந்தார்கள்.
பின் சீட்டில் இருப்பவரும் ஹெல்மெட் போட வேண்டும் என்பது இப்போதைய ரூலாம். பெரும்பகுதி வாகனங்களில் பின்னால் அமர்ந்திருப்பவர் ஹெல்மெட் போடவில்லை. அதை காரணம் சொல்லி அபராதம் போட்டுக் கொண்டிருந்தனர்.
குறிப்பாக 30 வயதுக்கு கீழ் வரும் தம்பதியினரை பிடித்தனர். அவர்கள் கணவன் மனைவியாகவும் இருக்கலாம் அல்லது காதலன் காதலியாகவும் இருக்கலாம். அந்த இளம் பெண்கள் பிரச்சினையை வளர்க்க விரும்பாமல் உடனே செட்டில் செய்ய தங்கள் ஆண் துணையிடம் சொன்னார்கள். இந்த சைக்காலஜி தெரிந்துதான் அவர்களும் இந்த குருப்புகளை பிடிக்கிறார்கள் என தெரிந்து கொண்டேன் .
நான் நின்ற இடத்தின் இடது புறம் இந்த மீன் பிடிப்பு நடந்து கொண்டிருந்தது .
பிடித்த சிலரை வலப் புறம் அழைத்து சென்று ஏதோ பேசி அனுப்பினர் ,
கடைக்காரரிடம் அது ஏன் எனக் கேட்டேன் . பிடிக்கும் இடத்தில் இடது புறம் நோக்கி ஒரு தனியார் கடை சிசிடிவி கேமிரா இருந்தது. வலதுபுறம் இல்லை .
ரசிது போட்டு வசூலிப்பது எல்லாம் இடது புறம் . மற்ற விவகாரம் எல்லாம் வலது புறம் , விழிப்பாகத்தான் இருக்கிறார்கள் .
ஒரு நாளைக்கு ஒரு போலிஸ்காரருக்கு 50 கேஸ் போட வேண்டுமாம் .
அபராத வசூல் மாதம் 5 கோடி என பேப்பர் செய்திகள் சொல்கின்றன .அது இப்படித்தான் நடக்கிறது
இவர்கள் நிற்கும் இடம் தாண்டி ஷேர் ஆட்டோக்கள் புளி மூட்டை மாதிரி ஆட்களை அடைத்துக் கொண்டு சென்றனர். சாதாரண ஆட்டோக்களின் டிரைவர்கள் யுனிபார்ம் எதுவும் போடாமல், பின் சீட்டில் ஆட்களை அடைத்து விட்டு டிரைவருக்கான சீட்டிலும், இரண்டு பக்கமும் இருவரை முருகன் வள்ளி தெய்வானைபோல் வைத்துக் கொண்டு போய்க் கொண்டிருந்தனர் இவர்களைப் பிடிக்க மாட்டார்களா எனக் கடைக்காரரிடம் கேட்டேன்.
சார் இந்த ஆட்டோக்களில் 95 சதவீதம் அரசியல்வாதிகளுக்கும் போலிஸ் அதிகாரிகளுக்கும் சொந்தமானது என்றார்.
உணவுப் பொருள் எடுத்துச் செல்லும் SUVIGGY , ZOMATTO காரர்களையும் பிடிக்கவில்லை. அந்தக் கம்பெனிகள் மாதா மாதம் இவர்களுக்கு கப்பம் கட்டிவிடுவார்கள் அதனால் பிடிப்பதில்லை என்றார் .
காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை கல், மணல் இடிபாட்டு பொருட்கள் ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள் நகருக்குள் செல்லக் கூடாது என்பது சட்டம் .ஆனால் அந்த வாகனங்கள் போலிஸ்காரர்களைத் தாண்டி சர்வ சாதரணமாக சென்று கொண்டிருந்தது .அதை எல்லாம் பிடிக்கவில்லை, மடக்கவில்லை. அது ஒரு சமயம் மந்திரிகளுக்கு சொந்தமானதாக இருக்கலாம்.
நான் செல்ல வேண்டிய பஸ் புட்போர்டு வரை தொங்கும் ஆட்களோடு வந்தது. இன்னும் அரை மணி நேரம் காத்திருக்க முடியாது என்பதால் அதில் ஏறிக்கொண்டேன் .
பஸ் ன் உள்ளே இருக்கை 50 நிற்க 20 என போட்டிருந்தது .அனால் பஸ் உள்ளே சுமார் 100 பேர் . இந்த பஸ் சை பிடிக்க போலிசுக்கு தெரியவில்லை
வங்கிகளில் கடன் வாங்கி இரு சக்கர வாகனம் வாங்கும் கீழ் நடுத்தர மக்களைத் தான் இந்த போலிஸ்களுக்கு பிடிக்க தெரிகிறது ஊருக்கு இளைச்சவன் எப்போதுமே பிள்ளையார் கோவில் ஆண்டிகள்தான்
பின் குறிப்பு : இது நடந்தது , நான் பார்த்தது ராஜஸ்தான் மாநிலத்தில் , இந்த குறிப்பு எதற்கு என்றால் இந்த 70 வயசில் நள்ளிரவு கைதுக்கு எல்லாம் நான் தயாரில்லை.
No comments:
Post a Comment