TN 55 N 0552 என்ற எண் கொண்ட அரசுப் பேருந்து அது 8.45pm க்கு பயணிகளை (10 பேர்) ஏற்றிக் கொண்டு தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து புதுக்கோட்டைக்கு புறப்பட்டது.
புனல்குளத்தில் 2 பயணிகளை இறக்கி
விட்டு புறப்பட்டது. டிரைவர், கண்டக்டர் இருவரும் காக்கி சீருடையில் இருந்தார்கள். இருவரும் காரசாரமாக ஏதோ பேசிக் கொண்டே வந்தார்கள்.
நான் அவர்களின் பேச்சில் ஈடுபாடு காட்டவில்லை. பயணம் தொடர்ந்தது பேருந்து கந்தர்வக்கோட்டையில் நின்றது. ஒரு பழைய நைட்டியில் மேலே ஒரு துண்டை மாராப்பாய் போட்டபடி ஒரு பெண்ணும் நடுத்தர வயதில் ஒரு ஆணும் ஏறினார்கள்.
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து அழுது கொண்டிருந்தனர் நான் அந்த ஆணிடம் ஏன் அழறீங்கனு கேட்டேன் பதிலில்லை. எனக்கு மனசு கேட்கலை மீண்டும் சற்று தாழ்வாக கேட்டேன். இல்ல இரண்டு பேருக்கும் சண்ட நா பேசலனு ஏதோ காஞ்சிரான் இலையை தின்னுட்டாருண்ணே னு ஓவென கதறி அந்தப் பெண் அழுதது எல்லோர் மனதையும் நனைத்தது. உடனே கண்டக்டர் ஓடி வந்து தன்னிடம் உள்ள தண்ணீர் பாட்டிலைக் கொடுத்து அவரை முழுசா குடிக்க சொல்லுமா வாந்தி எடுக்க சொல்லுமா? என்றார். சகபயணி ஒருவர் ஏன்யா பஸ் நாறாதா என்றதும் கண்டக்டர் உசுறு போக போகுதுனு சக மனுஷன் துடுச்சிக்கிட்ருக்கான்
பஸ் நாறுனா நான் தொடச்சுக்கிறேன்யா என கூறிய
தோடில்லாமல் பஸ்சில் ஒவ்வொருவரிடமும் போய் தண்ணி இருந்தா கொடுங்க என கெஞ்ச ஆரம்பித்தார்.
டிரைவர் ஒரு இடத்திலும் பஸ் நிறுத்தாமல் நேரா மருத்துவமனை வளாகத்தில் அவர்களை இறக்கி விட்டு பணம் காசு வச்சுருக்கியாமா தரவா எனக் கேட்டு ஒருபடி மேலே சென்றார்.
இது போன்ற சகோதரர்கள் இருக்கும்
வரை நமது தமிழ் தேசத்தில் மனிதம் மரித்தே போகாது என்ற நம்பிக்கை வந்தது. டிரைவரையும் கண்டக்டரையும் கட்டியணைத்து பாராட்டி
விட்டு வந்தேன். இவர்தான் அந்த கண்டக்டர் பரமசிவம்...
பாராட்டுக்கள் சார்.
No comments:
Post a Comment