'இவருக்கு விசா கொடுக்காதீங்கன்னு, உள்ளூர் பெரிசுகள் எழுதுன கடுதாசிய உயர்த்தி பிடிச்சபடி உரக்க சிரிச்ச தேசத்தில்,
இப்போது திரும்பும் திசையெல்லாம் 'மோடி மோடி' என்ற உற்சாக வாழ்த்து கோஷம்.
அசலூருக்கு வந்திருக்கோம் அதனால கொஞ்சம் அடக்கி வாசிப்போமென்ற எண்ணம் இல்லாமல்
மோடியின் வருகைக்கு தேதி குறித்த நாளிலிருந்து பற்றி கொண்ட உற்சாகம்.
அந்த உற்சாகத்தை கொண்டாட்டமாக மாற்றிய அமெரிக்க வாழ் இந்தியர்கள்.
மோடியின் வருகைக்கு முன்னமே
வரிசைகட்டி நடந்த பாரம்பரிய கலாச்சார வரவேற்பு அணிவகுப்பு பயிற்சிகள்.
மோடியின் வருகைக்கு முன்னமே,
'வீழ்ச்சியின் இறுதி கட்டத்தில் இருக்கும் அமெரிக்கா, தாங்கி பிடித்து கொள்ள நல்லதொரு துணையை கண்டறிந்து விட்டது. இனி மீண்டும் இந்த உலகம் நம் வசமே'
என்ற எண்ணத்தில், வரிசை கட்டி எதிர்கால நலன்கள், வளர்ச்சி குறித்து பேசி ஓய்ந்த அமெரிக்க தலைவர்கள்.
மோடியின் வருகைக்கும் முன்னமே
அவர் செல்லும் இடங்களில் எல்லாம் முன்பதிவு முடிந்து விட்ட ஓட்டல்கள், விருந்தினர் மாளிகைகள்.
மோடியின் வருகைக்கும் முன்னமே
இந்திய அமெரிக்க நல்லுறவு, எதிர்கால வளர்ச்சி வாய்ப்புகள் குறித்து பத்தி பத்தியாக, பக்கம் பக்கமாக எழுதி தள்ளிய ஊடகங்கள்.
மோடியின் வருகைக்கும் முன்னமே
அமெரிக்காவின் இருபது முக்கிய நகரங்களில் இந்தியர்கள் நடத்திய பேரணி, எழுப்பிய மோடி மோடி வாழ்த்து கோஷம்.
மோடியின் வருகைக்கும் முன்னமே
'அந்த கூட்டத்தில், இடத்தில் நமக்கு அனுமதி கிடைக்கவில்லையே என்ற மக்களின் ஏக்கம், வருத்தம்.
மோடியின் வருகைக்கும் முன்னே
மோடியின் அமெரிக்க பயணம் உலக பொருளாதார மந்த நிலையில் ஏதேனும் மாற்றத்தை உருவாக்குமா என்ற கழுகுப் பார்வையில் முதலீட்டாளர்கள்.
மோடியின் வருகைக்கும் முன்னே
எதிர்காலத்தில் நாம் பட்டியலில் எத்தனையாவது இடத்தில் இருப்போம் என்று அலசி ஆராயும் உலக நாடுகள்.
மோடியின் வருகைக்கும் முன்னமே
அமெரிக்க - இந்திய உறவின் நெருக்கத்தில், நாம் எந்த பக்கம் இருப்பது ஆதாயம் தரும் என்ற உலக நாடுகளின் ஆலோசனை.
அமெரிக்க வரலாற்றில் இப்படி பலப்பல விஷயங்களில் ஆச்சரியமான ஒரு சூழல் நிகழ்வதை உலகமே கண் கொட்டாமல் பார்த்து கொண்டு இருக்கிறது.
அது தான் 'மோடி மேஜிக்'.
உலகின் குரு 'பாரதம்'.
உன்னத தலைவர் மோடி.
No comments:
Post a Comment